யாழ்ப்பாணத்தில் இருந்து உதைபந்தாட்ட அணிக்கு 4 வர் தெரிவு

jaffnaயாழ்மாவட்டத்தில் இருந்து அமெரிக்க உதைபந்தாட்ட விளையாட்டில் தேசிய அணிக்கு நான்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ் வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி.திணோஜன், யாழ் வொறியஸ் விளையாட்டுக் கழகத்தின்  உப தலைவர் டி.நிமல்ராஜ், யாழ் கழுகுகள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர்.எச.எம்.டி.டி.பி.நாரன்பணாவ, மற்றும் யாழ் புள்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர்.பிரசாத்குமார் ஆகியோர் இலங்கைக்கான அமெரிக்க உதைபந்தாட்ட தேசிய அணியில் இடம் பிடித்துள்ளனர்,கடந்த வருடம் யாழ்மாவட்டத்தில் இவ் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் யாழ் மாவட்ட அமைப்பாளரும், பயிற்றுவிப்பாளருமாக திரு.குலசிங்கம்.குலரட்ணம் கடமையாற்றி வருகின்றார். குறித்த பயிற்றுவிப்பாளர் அண்மையில் தேசிய ரீதியில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான நீளம் பாய்தல் நிகழ்வில் வெள்ளிப்பதக்கத்தினை தனதாக்கி யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தவர் என்பதும் குறிப்பிடபக் கூடியது.

தமிழ் மக்கள் பேரவையின் வரைவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!
 
peravaiதமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வின் முன்மொழிவு வரைவு தீர்வு திட்டம் நேற்று ஏகமனதாக வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய வைத்திய கலாநிதி ப.லக்ஸ்மன் தெரிவித்தார்.

இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அச்சு பிரதிகளையும் மிக விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் நான்காவது அமர்வு இன்று யாழ் பொதுநுலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே லக்ஸ்மன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இனிய தழிழ்ப் புத்தாண்டே விடுதலை தந்திடு

nagaranchiniபிறக்கின்ற இவ் தமிழ்ப் புத்தாண்டு தமிழ் மக்களது விதலையை உறுதிப்படுத்திட வேண்டும். கடந்து விட்ட எமது வரலாற்றின் நடந்து வந்த பாதைகளை கனவுகளோடும். களம் பல தந்த  என்றுமே மாறாத வடுக்களோடும் என்றும் பயனித்திடும் உத்தமர்களின் தியாகம் வென்றிடவும். நாம் நம்பி வாக்களித்து இன்று வரையில் எதிர்பார்த்திருக்கும் நல்லாட்சி மெய்ப்பட்டிடவும். ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக சித்திய உதிரத்திற்கு உறுதியான் அரசியல் தீர்வு கிடைத்திடவும். பேரினவாதத்தின் இரும்புசுவர்களுக்குள் இறுகப்பூட்டப்பட்டுள்ள விடுதலை விரும்பிகள் விடுபட்டிடவும். முட்கம்பிகளால் இறுக்கப்பட்டுள்ள எம்மவர் மருதநிலங்கள் விடுபட்டிடவும். எல்லையிடப்பட்டு தடுக்கப்பட்டுள்ள எங்கள் நெய்தல் நிலங்கள் எம்மவர்களின் கரங்களுக்குள்  வந்திடவும். எரிக்கப்பட்ட எங்கள் முல்லைகள் செழித்திவும். எங்கள் குறிஞ்சி நிலம் மீண்டும் எம் தலைநகராக மிளிர்திடவும். காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளை தேடி நித்தமும் கண்ணீர் சிந்திடும் துயர் மிக்க உள்ளங்கள் ஆறுதல் அடைந்திடவும். எங்கள் காவிய நாயகர்களை தடையின்றி நினைவுகூர்ந்திட வழிபிறந்திடவும் இவ் நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்பதோடு. நாம் தழிழர் என்ற உறவோடு ஒயாது எம் பாதங்கள் இலச்சியம் நோக்கி நகர இந் நாளில் ஒன்றிணைந்து சபதம் எடுத்திடுவோம்.
என்றும் தழிழ் அன்னையின் புதல்வியாய்
திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன்