‘புங்குடுதீவு தாயகம்’ அமைப்பினால் வைத்தியசாலை பொருட்கள் அன்பளிப்பு..!!

mullai01சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட ‘வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்’ முதற்கட்டமாக  வவுனியா பொது வைத்த்யசாலைக்கும், அதனைத் தொடர்ந்து  ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வவுனியா சிதம்பரபுரம் வைத்தியசாலைக்கும். அதனைத் தொடர்ந்து கடந்த   08 ஃ04ஃ2016, முல்லைத்தீவு  மாஞ்சோலை  ‘வைத்தியசாலைக்கு தேவையான சத்திர சிகிச்சை  பொருட்கள்’ வழங்கி வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின்  தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில், வட மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட  உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து கொண்டு சத்திர சிகிச்சை பொருட்களை முல்லைத்தீவு வைத்தியசாலைப் பணிப்பாளர்  அவர்களிடம் கையளித்தார்.

இவ் நிகழ்வில் வைத்திய கலாநிதி திரு எஸ்.மணிவண்ணன், வன்னி மேம்பாட்டு பேரவை தலைவர் தவராசா, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் திரு ஸ்ரீ. கேசவன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் திரு எஸ்.கஜூரன்  ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.