வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதாரத்துக்கான நிதி அன்பளிப்பு(படங்கள் இணைப்பு)
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இன்று வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டம் குமிழமுனை முழங்காவில் எனும் இடத்தை சேர்ந்த யுத்தத்தினால் பாதிக்கபட்ட சுயானாவுக்கு வாழ்வாதார நிதியாக 76500 ரூபா வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தில் வைத்து கையளிக்கபட்டது.
சுயானா கடந்த கால யுத்தத்தின் போது தனது இரு கால்களையும் ஒரு கையும் ஒரு கண்னையும் எறிகனை வீச்சின்போது இழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயானா இவர் கணவரால் கைவிடப்பட்டு தனது பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து வருகின்றார்.இவர் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஊடாகவும் நேரடியாகவும் வாழ்வாதாரத்திற்க்கும் மற்றும் வீடு புனரமைப்புக்காகவும் உதவி செய்யும்படி விடுத்த வேண்டுகோளை அடுத்து சுவிஸ் நாட்டில் உள்ள நந்தினி செல்வரட்ணம் அவர்களால் 76500 ரூபா வட்டுக்கோட்டை இந்து வாலபர் சங்கத்தினூடாக அனுப்பபட்டு பரந்தனில் உள்ள வன்னி வழிப்பலனற்றோர் சங்கத்தில் வைத்த வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர் கு.பகீதரனால் இன்று காலை 9.00 மணியளவில் சுயானாவிடம் கையளிக்கபட்டது.
இக் கருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் உறவான நந்தினி செல்வரட்ணம் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.