வட்டு. இந்து வாலிபர் சங்கத்தினால் கிணறு அமைக்க சீமெந்து பைகள் அன்பளிப்பு-

D1புதுக்குடியிருப்பு உடையர்கட்டு தெற்கு மூங்கிலாற்றைச் சேர்ந்த கதிர்ச்செல்வன் கருணாநதி என்பவருக்கு கிணறு அமைப்பதற்காக இராண்டம் கட்டமாக 23520 ரூபா பெறுமதியான 28 சீமெந்து பைகள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தத்தின் காரணமாக தனது கணவனை இழந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இவர் கிணறு இன்றி பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த வேளையில் எமது சங்கத்திடம் கிணறு கட்டுவதற்கான பொருட்களை தந்துதவுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க முதற் கட்டமாக 2015.12.07 அன்று 12 சீமெந்து பைகளும் இன்று தலா 840 ரூபா பெறுமதியான 28 சீமெந்து பைகளும் (23520ரூபா) வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அன்பளிப்பினை எமது புலம்பெயர் உறவுகளான ஆவுஸ்ரோலியாவைச் சேர்ந்த முரளிதரன் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த கனகனேந்திரன் ஆகியோர் வழங்கியுள்ளனர். எமது தாயக உறவுகளின் துயர் குறைப்பதற்காக எமது சங்கத்தின் ஊடாக உதவியினை வழங்கிய எமது புலம்பெயர் உறவுகளுக்கு சங்கத்தின் சார்பிலும் எமது உறவுகள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

திருமதி. மங்கையகரசி அமிர்தலிங்கம் அவர்கட்கு சுழிபுரத்தில் அஞ்சலி-(படங்கள் இணைப்பு)

DSCN0280அண்மையில் இயற்கை எய்திய திருமதி. மங்கையக்கரசி அமிர்தலிங்கம் அவர்கட்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுழிபுரம் பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் தோழர் சின்னக்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு அமரர் அவர்களது திரு உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர். DSCN0278 DSCN0281 DSCN0282 DSCN0283