வவுனியா கோவில்குளம் றொக்கற் விளையாட்டுக் கழக புதுவருட விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)
வவுனியா கோவில்குளம் றொக்கற் விளையாட்டுக் கழகத்தின் 40 வருட பூர்த்தியையும், தமிழ் சிங்கள புது வருடப்பிறப்பை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு விழா கோவில்குளம் இந்துக்கல்லூரி மைதானத்தில் 14.04.2016 அன்று கழகத்தின் தலைவர் திரு க.பார்த்தீபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பொருளாளர் திரு கே.தனபாலசிங்கம், சமூக சேவையாளர் திரு சி.சரவணமுத்து ஆகியோருடன் கௌரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபரும், கோவில்குளம் சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவருமான திரு சி.வையாபுரிநாதன், கோவில்குளம் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கத் தலைவர் திரு எஸ்.ஜொயெல் நிரோசன், சமூக ஆர்வலர் திரு ர.சிவசுப்பிரமணியம், கழகத்தின் முன்னாள் தலைவர்களான திரு நீ.பாலசுப்பிரமணியம், திரு செ.தவச்செல்வன் ஆகியோருடன் பெருந்திரளான மக்களுடன், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன், மாணவர்களை மகிழ்விக்கும் குதுகல விளையாட்டுகளும், மைதான நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றதுடன், இம்முறை பரீட்சைகளில் திறமை காட்டிய மாணவர்களுக்கான கௌரவிப்புடன், ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.