Header image alt text

தெல்லிப்பளையில் அமரர் சிவமகாராஜா அவர்களின் உருவச்சிலை திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)

sivamaharajah 16.04 (8)முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ். தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னைநாள் தலைவருமான அமரர் சின்னத்தம்பி சிவமகாராஜா அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அன்னாரது உருவச்சிலை தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் நேற்று (16.04.2016) சனிக்கிழமை தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தற்போதைய தலைவர் உமாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னத்துரை ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்த்தின் தலைவர் ஆறுதிருமுருகன், யாழ். பல்கலைக்கழக முன்னைநாள் உபவேந்தர் சண்முகலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

வியாபாரிமூலை கலைமணியின் கல்விக் கௌரவிப்பு விழா-2016-(படங்கள் இணைப்பு)
14.04.2016 kalaimani kauravippu vizha (9)பாடநெறிகளில் விசேட சித்திபெற்ற மாணவ, மாணவியரைக் கௌரவிக்கும் நிகழ்வு பருத்தித்துறை வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையம் மற்றும் விக்னேஸ்வரா படிப்பகத்தில் கலைமணி சனசமூக நிலையத் தலைவர் திரு. க.கதிரமலை (முன்னைநாள் கல்விப் பணிப்பாளர்) அவர்களின் தலைமையில் கடந்த 14.04.2016 வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. சுகிர்தன் (முன்னைநாள் உயர்தொழில்நுட்பவியல் நிறுவன முன்னாள் பணிப்பாளர்), திரு. பா.கஜதீபன் (வட மாகாணசபை உறுப்பினர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாடநெறிகளிலே விசேட சித்திபெற்ற மாணவ, மாணவியர் கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் மாணவ, மாணவியரின் பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

Read more

மா.பா.சி கேட்டவை – நூல் வெளியீடும் நூலாய்வும்-(படங்கள் இணைப்பு)

20160417_170317மா.பா.சி கேட்டவை – நூல் வெளியீடும் நூலாய்வும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களின் தலைமையில் இன்றுமாலை 4.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இதன்போது நீர்வை பொன்னையன் (ஆசிரியர் குழு, புதிய தளம்) அவர்களால் மா.பா.சி கேட்டவை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூலறிமுகம் சமூக செயற்பாட்டாளர் எம். மதன்ராஜ் அவர்கள், நூலாய்வு ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி உப பீடாதிபதி வ.செல்வராசா அவர்கள்,

கருத்துரை பதிப்பாசிரியர் ந.இரவீந்திரன் மற்றும் தினக்குரல் முன்னாள் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் ஆகியோர், ஏற்புரை நூலாசிரியர் மா.பாலசிங்கம் (மா.பா.சி) அவர்கள், நன்றியுரையினை புதிய பண்பாட்டுத் தள இணைப்பாளர் ஜெ.லெனின் மதிவானம் அவர்கள் நிகழ்த்தினார்.
Read more

எக்வடோர் நிலநடுக்கத்தில் சுமார் 77 பேர் உயிரிழப்பு-

asasasaதென் அமெரிக்க நாடான எக்வடோரில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது 77 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 600 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலநடுக்கமே பல தசாப்தங்களில் அங்கு ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என நாட்டின் துணை அதிபர் எச்சரித்துள்ளார்.

தற்போது எக்வடோரின் ஆறு மாகாணங்களில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் தேசியப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம் 7.8 அளவுக்கு சக்தி கொண்டது என அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் மேற்கு கரையோரம் உள்ள முசீன் நகருக்கு தென்கிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்துள்ளது. பல்லுயிர் வாழும் காலபோகஸ{ம் எக்வடோரில் உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து விமானநிலைய கோபுரம் உட்பட ஏராளமான கட்டடங்களும், மேம்பாலங்கள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்யுமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தல்-

sdsdsdsயாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டங்களை மீள் பரிசீலணை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு வலியுறுத்தி வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பொது நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதன் பின்னர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதன்போது அவர் கூறியதாவது, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் 65 ஆயிரம் பொருத்து வீடுகள் எமது மக்களுக்க பொருத்தமாக இருக்குமென நினைக்கவில்லை. எமது மக்களின் பரம்பரையான நடவடிக்கைகளில் மாற்றத்தினைக் கொண்டு வருவதனை விரும்பவில்லை. அது மக்களின் கலாச்சாரத்துடன் பிண்ணிப் பிணைந்த விடயம். ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்தில் பல வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், பொருத்து வீடுகள் கட்டப்படவில்லை, ஏன் யாழ்ப்பாணத்தில் பொருத்து வீடுகள் கட்டப்பட வேண்டும். ஒரு சாதாரண வீடு கட்டுவதை விட இரண்டு மடங்கு பணம் செலவிடப்பட வேண்டியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் போது, குறித்த 65 ஆயிரம் வீடுகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என ஊடகங்களில் செய்திகளை பார்த்தோம். எமது கருத்துக்களை ஜனாதிபதிக்கு முன்வைத்து அந்த 65ஆயிரம் வீட்டுத் திட்டம் குறித்த மீள் பரிசீலணைக்குட்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

ஜீ7 நாடுகளின் மாநாட்டில் விசேட விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு-

maithriஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ7 நாடுகளின் மாநாட்டின் விசேட விருந்தினராக கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அடுத்த மாதம் ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பானிய பிரதமர், சின்சோ அபேயின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 அங்கத்துவ நாடுகளும் இதில் பங்கேற்கின்றன. அதன் 47 வது வருடாந்த மாநாடு, எதிர்வரும் மே மாதம் 26ம் மற்றும் 27ம் திகதிகளில் ஜப்பானில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதில் கலந்து கொள்கின்ற நிலையில் அவர்களையும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நிலக்கரி மின் நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்-

ertrtrtttதிருகோணமலை, மூதூர் கிழக்கு சம்பூரில் அமைய உள்ள நிலக்கரி மின் நிலையத் திட்டம் வேண்டாம் எனக் கோரி சம்பூர் மீள் குடியேற்ற கிராம மக்கள் இன்று காலை சம்பூர் அரசடி விநாயகர் கோயிலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக மட்ட பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிய மகஜர் ஒன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனிடம் கையளித்து அவருடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.