மா.பா.சி கேட்டவை – நூல் வெளியீடும் நூலாய்வும்-(படங்கள் இணைப்பு)
மா.பா.சி கேட்டவை – நூல் வெளியீடும் நூலாய்வும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களின் தலைமையில் இன்றுமாலை 4.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இதன்போது நீர்வை பொன்னையன் (ஆசிரியர் குழு, புதிய தளம்) அவர்களால் மா.பா.சி கேட்டவை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நூலறிமுகம் சமூக செயற்பாட்டாளர் எம். மதன்ராஜ் அவர்கள், நூலாய்வு ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி உப பீடாதிபதி வ.செல்வராசா அவர்கள்,
கருத்துரை பதிப்பாசிரியர் ந.இரவீந்திரன் மற்றும் தினக்குரல் முன்னாள் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் ஆகியோர், ஏற்புரை நூலாசிரியர் மா.பாலசிங்கம் (மா.பா.சி) அவர்கள், நன்றியுரையினை புதிய பண்பாட்டுத் தள இணைப்பாளர் ஜெ.லெனின் மதிவானம் அவர்கள் நிகழ்த்தினார்.