எக்வடோர் நிலநடுக்கத்தில் சுமார் 77 பேர் உயிரிழப்பு-

asasasaதென் அமெரிக்க நாடான எக்வடோரில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது 77 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 600 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலநடுக்கமே பல தசாப்தங்களில் அங்கு ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என நாட்டின் துணை அதிபர் எச்சரித்துள்ளார்.

தற்போது எக்வடோரின் ஆறு மாகாணங்களில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் தேசியப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம் 7.8 அளவுக்கு சக்தி கொண்டது என அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் மேற்கு கரையோரம் உள்ள முசீன் நகருக்கு தென்கிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்துள்ளது. பல்லுயிர் வாழும் காலபோகஸ{ம் எக்வடோரில் உள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து விமானநிலைய கோபுரம் உட்பட ஏராளமான கட்டடங்களும், மேம்பாலங்கள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.