அமரர் மண்டலநாயகம் விதானையாரின் ஞாபகார்த்தமாக திருக்கோவிற் பாமாலை வெளியீடு-(படங்கள் இணைப்பு)-

15.04.2016 Chunnakam (5)அமரர் மண்டலநாயகம் விதானையார் அவர்களின் ஞாபகார்த்தமாக அவருடைய குடும்பத்தினர் திருக்கோவிற் பாமாலை என்ற நூலினை கடந்த 15.04.2016 வெள்ளிக்கிழமை அன்று யாழ். சுன்னாகம் அருள்மிகு சந்திரசேகரப் பிள்ளையார் தேவஸ்தான மணிமண்டபத்தில் வைத்து வெளியிட்டுள்ளனர். இதில் ஆலயங்களில் பாடுவதற்குத் தேவையான எல்லா தேவாரங்களும் பாமாலையாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்விலே புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம், நல்லை ஆதீனம், தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தின் தலைவர் ஆறு திருமுருகன், யாழ். பல்கலைக்கழக முன்னைநாள் உபவேந்தர் சண்முகலிங்கம், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். 15.04.2016 Chunnakam (1) 15.04.2016 Chunnakam (2) 15.04.2016 Chunnakam (3) 15.04.2016 Chunnakam (4) 15.04.2016 Chunnakam (5)