Header image alt text

துயர் பகிர்வோம் – அமரர் பெனடிக்ட் தனபாலசிங்கம் அவர்கள்-

singam 01

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிறு பராயத்திலிருந்தே மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்கள் நேற்று இரவு (18.04.2016) மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

தனது இளம் பராயத்திலேயே சமூக சேவைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்த சிங்கம் அவர்கள், தனது ஆரம்ப அரசியல் பணிகளை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ.இராஜதுரை அவர்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் முன்னெடுத்திருந்தார்.

1983 இனக் கலவரத்தினைத் தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட தோழர் சிங்கம் அவர்கள், கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினராகவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினராகவும், கட்சியின் உப தலைவர்களுள் ஒருவராகவும் இன்றுவரை தொடர்ச்சியாக இடையறாது தனது மக்கள் பணியினைத் தொடர்ந்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உதவி மேயரும், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் நகரபிதாவுமான பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்கள், மக்கள் பணிகளிலே சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அவர், மட்டக்களப்பில் மாத்திரமல்லாது யாழ், வன்னி மாவட்டங்களிலும் மக்களுக்கான தனது அர்ப்பணிப்புமிக்க அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

கிழக்கின் வளர்ச்சியிலும், அமைதியிலும் ஆழ்ந்த பற்றும் உறுதியும் கொண்டிருந்த அவர், தன்னலமற்ற சேவையினை மக்களுக்கு ஆற்றுவதிலே நிகரற்று விளங்கியவர் என்பதோடு, சுகயீனங்களுக்கு மத்தியிலும் கூட கழகத்தின் பணிகளிலே மரணிக்கும் வரையில் இடையறாது தனது பங்களிப்பை செலுத்தி வந்தார்.

கடந்த முப்பது வருட அரசியல் சூழ்நிலைகளில் பல்வேறுவகையான நெருக்குவாரங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உட்பட்டிருந்தபோதிலும் மக்களுக்கான தனது பணியை அவர் ஒருபோதும் மறந்தவருமல்ல, மறுத்தவருமல்ல.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், தோழர்கள், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்கின்றோம்.

ஆறாத் துயருடனும், கனத்த இதயத்துடனும்
எமது இதய அஞ்சலிகளைச் செலுத்தி விடை தருகின்றோம்…
சென்று வா தோழா!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்ள் விடுதலை (DPLF)

plote

மரண அறிவித்தல்

Posted by plotenewseditor on 19 April 2016
Posted in செய்திகள் 

மரண அறிவித்தல்

benedict thanabalasingam 18.04 (2)யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு புதுநகரை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ட் தனபாலசிங்கம் அவர்கள் (18.04.2016) திங்கட்கிழமை மட்டக்களப்பில் மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

தனது இளம் பராயத்திலேயே சமூக சேவைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்த சிங்கம் அவர்கள், தனது ஆரம்ப அரசியல் பணிகளை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ.இராஜதுரை அவர்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் முன்னெடுத்திருந்தார்.

1983ல் புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் சிங்கம் அவர்கள், கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினராகவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினராகவும், கட்சியின் உப தலைவர்களுள் ஒருவராகவும் இன்றுவரை தொடர்ச்சியாக இடையறாது தனது மக்கள் பணியினைத் தொடர்ந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உதவி மேயரும், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் நகரபிதாவுமான பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்கள், மக்கள் பணிகளிலே சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். அவர், மட்டக்களப்பில் மாத்திரமல்லாது யாழ், வன்னி மாவட்டங்களிலும் மக்களுக்கான தனது அர்ப்பணிப்புமிக்க அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கே ஒரு பேரழிப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

plote

குறிப்பு – அன்னாரின் பூதவுடல் அவரது புதூர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு இன்றுமாலை 4.00மணியளவில் அன்னாரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளது. தொடர்புகட்பு : (0779818459 – கேசவன்)

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்- 

wqeweமட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் வீட்டின்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் குற்றவாளிகளை விரைவாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும் மாநகரசபை ஊழியர்களினால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 அளவில் மட்டக்களப்பு மாநகரசபையில் இருந்து காந்தி பூங்கா வரையில் அமைதியான முறையில் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், காந்தி பூங்காவில் இருந்து மீண்டும் மாநகரசபை வரையில் பேரணியாக சென்றனர். “தன்னலமற்ற பொதுச்சேவைக்கு கிடைத்த வெகுமதி வன்முறையா?, இன்று மாநகர ஆணையாளருக்கு நாளை?, மாநகர ஆணையாளரின் வதிவிடத்தில் நடந்த அனர்த்தத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்து..” உட்பட பல சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். கடந்த 09ம் திகதியிரவு மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமாரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம்மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்களுக்கு 24ம் திகதி முதல் விண்ணப்பிக்கலாம்-

graduateபுதிய கல்வியாண்டு தொடர்பில் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்த விண்ணப்பங்களை இணையம் மற்றும் எழுத்து மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க மாணவர்களுக்கு முடியும். கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. இதேவேளை, புதிய கல்வி ஆண்டு தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்த அனுமதிப் பத்திர கையேடு எதிர்வரும் 22ம் திகதி வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பில் நாளை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, புதிய கல்வியாண்டு தொடர்பில் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 24ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லையூடான கடத்தல்களை தடுக்க விசேட பயிற்சி-

navyசர்வதேச கடல் எல்லையூடாக முன்னெடுக்கப்படும் கடத்தல்களை நிறுத்துவதற்கு கடற்படையினருக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடற்படை உறுப்பினர்களை பயிற்சியின் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் சர்வதேச கடல் எல்லையில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கான இரண்டு யுத்த கப்பல்கள் அடுத்த வருடம் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளதாகவும் கடற்படை தளபதி கூறியுள்ளார். இதேவேளை, சர்வதேச கடல் எல்லையில் முன்னெடுக்கப்படும் கடத்தல்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான சோதனை நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளவுள்ளதாகவும் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நிர்வாக மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்டோர் உட்பட உறுப்பினர்களின் முதலாவது சந்திப்பு..!! (படங்கள் இணைப்பு)
41c52d87-fe6e-42c4-afad-ec8c4a7b6078சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் மாத்திரமல்லாது அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்குமான கூட்டம் நேற்றையதினம் (17.04.2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30மணியளவில் ஆரம்பமாகி சுமார் மாலை 6.00 மணிவரை மிகவும் ஆரோக்கியமாகவும், சுமுகமாகவும் நடைபெற்றது.
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் அமைதி வணக்கத்துடன் கூட்டத்தினை ஆரம்பித்து வைத்ததோடு, இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் கூட்ட நேர ஒழுங்குகள், கூட்டத்திற்காக முன்கூட்டி அறிவிக்கப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய செயலாளர் திரு. செல்லத்துரை சதானந்தன் அவர்கள், கடந்த 28.03.2016அன்று நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டம் மற்றும் கடந்த 30.03.2016 இல் நடைபெற்ற நிர்வாகசபைக் கூட்டம் என்பவற்றின் கூட்ட அறிக்கையினை வாசித்தார். 

Read more