Header image alt text

அமரர் பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்களின் அஞ்சலி நிகழ்வுகள்-

19.04.2016 singam funeral batticaloa (3)அமரர் பெனடிக்ட் தனபாலசிங்கம் அவர்களின் அஞ்சலி நிகழ்வுகள் நேற்றுமாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு புதுநகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது. அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கோ.கருணாகரம் (ஜனா), கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், தமிழர் சமூக ஜனநாயக் கட்சியின் பிரதிநிதி பரதன்,

புளொட் தலைவரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் (அமல்), வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் (பவன்), வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), புளொட்டின் – மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நிஸ்கானந்தராஜா (சூட்டி), அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சிவநேசன் (பத்தன்) மற்றும் தோழர் கேசவன் உள்ளிட்ட கழகத்தின் பல மூத்த உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள், மட்டக்களப்பின் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள்;, பொதுமக்கள் என பெருந்தொகையிலானோர் கலந்துகொண்டிருந்தார்கள். இரங்கல் உரைகள் கழகத் தோழர் நிமலன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அமரர் சிங்கம் அவர்களின் உடல் மாலை 5.00 மணியளவில் புதுநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. Read more

யாழ். கரவெட்டி ராஜகிராமம் செஞ்சுடர் விளையாட்டுக்கழக நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)

rajakiramam 18.04 (6)யாழ். கரவெட்டி ராஜகிராமம் செஞ்சுடர் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் தலைவர் அமரர் வேலன் சின்னக்கிளி (செல்லக்கிளி) அவர்களின் ஓராம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு

அவரது ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட இறுதி நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும், கலை விழாவும் நேற்று முன்தினம் (18.04.2016) மாலை 4மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். Read more

தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 34ஆம் ஆண்டு நிறைவு-(படங்கள் இணைப்பு)

Tellipalai 17.04 (8)யாழ். தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 34ஆம் ஆண்டு நிறைவும் பரிசளிப்பு விழாவும் கடந்த 17.04.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் மகளிர் இல்ல நிர்வாகத்தினர், பெண்கள், சிறுவர், சிறுமியர், பெரியோர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமனம்-

poojitha jayasundaraஇலங்கையின் 34வது பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை ஜனாதிபதியிடம் இருந்து பூஜித்த ஜெயசுந்தர பெற்றுக் கொண்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபராக இருந்த என்.கே. இளங்கக்கோன் அண்மையில் ஓய்வு பெற்றதை அடுத்து, அப் பதவிக்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்திருந்தார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த எஸ்.எம். விக்ரமசிங்க, பூஜித்த ஜெயசுந்தர மற்றும் சந்தன விக்ரமரத்ன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவர்களில் பூஜித்த ஜெயசுந்தரவை அரசியலமைப்புச் சபை தெரிவு செய்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன மூவர் வெலிகடை சிறையில் தடுப்பு-

jailமுத்தையன்கட்டு மற்றும் புளியம்பொக்கணை ஆகிய இடங்களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போனதாக தெரிவிக்கப்படும் மூன்று இளைஞர்கள் மாலைதீவிலிருந்து கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது இளைய சகோதரன் 2005ல் வீட்டைவிட்டு வெளியே விளையாடச் சென்றிருந்தபோது காணாமல் போயிருந்ததாகவும் சம்பவம் நடந்து 6ஆண்டுகளின் பின்னர் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மாலைதீவு சிறை ஒன்றில் உள்ளதாக கூறியதாகவும் அவர்களை நேரில் சென்று பார்த்துவிட்டு திரும்பிய கௌரிராஜா கவிதா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். தனது சகோதரன் உட்பட மூன்று இளைஞர்களும் மாலைதீவு சிறையிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். கணேஸ் இராமச்சந்திரன், நவரத்தினராசா ரஞ்சித், முத்துலிங்கம் யோகராஜா ஆகியோரே இந்த மூவருமென கூறப்படுகிறது.

கிராம சேவகரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

??????????மட்டக்களப்பு சிவபுரத்தில் கிராமசேவை உத்தியோகத்தர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று அமைதியான முறையில் முன்னெடுக்கப் பட்டிருந்தது.

கடந்த 15.04.2016 சனிக்கிழமை இரவு மர்மமான முறையில் கிராமசேவை உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். குறித்த கிராம சேவை உத்தியோகத்தரின், மரணச் சடங்கு மகிழுரில் உள்ள அன்னாரது இல்லத்தில் நேற்று நடைபெற்று பின் அவர் கடமை புரிந்த மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலகத்திகு அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டது. Read more