அமரர் பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்களின் அஞ்சலி நிகழ்வுகள்-
அமரர் பெனடிக்ட் தனபாலசிங்கம் அவர்களின் அஞ்சலி நிகழ்வுகள் நேற்றுமாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு புதுநகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது. அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கோ.கருணாகரம் (ஜனா), கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், தமிழர் சமூக ஜனநாயக் கட்சியின் பிரதிநிதி பரதன்,
புளொட் தலைவரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் (அமல்), வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் (பவன்), வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), புளொட்டின் – மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நிஸ்கானந்தராஜா (சூட்டி), அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சிவநேசன் (பத்தன்) மற்றும் தோழர் கேசவன் உள்ளிட்ட கழகத்தின் பல மூத்த உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள், மட்டக்களப்பின் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள்;, பொதுமக்கள் என பெருந்தொகையிலானோர் கலந்துகொண்டிருந்தார்கள். இரங்கல் உரைகள் கழகத் தோழர் நிமலன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து அமரர் சிங்கம் அவர்களின் உடல் மாலை 5.00 மணியளவில் புதுநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.