பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமனம்-

poojitha jayasundaraஇலங்கையின் 34வது பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை ஜனாதிபதியிடம் இருந்து பூஜித்த ஜெயசுந்தர பெற்றுக் கொண்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபராக இருந்த என்.கே. இளங்கக்கோன் அண்மையில் ஓய்வு பெற்றதை அடுத்து, அப் பதவிக்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்திருந்தார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த எஸ்.எம். விக்ரமசிங்க, பூஜித்த ஜெயசுந்தர மற்றும் சந்தன விக்ரமரத்ன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவர்களில் பூஜித்த ஜெயசுந்தரவை அரசியலமைப்புச் சபை தெரிவு செய்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன மூவர் வெலிகடை சிறையில் தடுப்பு-

jailமுத்தையன்கட்டு மற்றும் புளியம்பொக்கணை ஆகிய இடங்களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போனதாக தெரிவிக்கப்படும் மூன்று இளைஞர்கள் மாலைதீவிலிருந்து கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது இளைய சகோதரன் 2005ல் வீட்டைவிட்டு வெளியே விளையாடச் சென்றிருந்தபோது காணாமல் போயிருந்ததாகவும் சம்பவம் நடந்து 6ஆண்டுகளின் பின்னர் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மாலைதீவு சிறை ஒன்றில் உள்ளதாக கூறியதாகவும் அவர்களை நேரில் சென்று பார்த்துவிட்டு திரும்பிய கௌரிராஜா கவிதா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். தனது சகோதரன் உட்பட மூன்று இளைஞர்களும் மாலைதீவு சிறையிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். கணேஸ் இராமச்சந்திரன், நவரத்தினராசா ரஞ்சித், முத்துலிங்கம் யோகராஜா ஆகியோரே இந்த மூவருமென கூறப்படுகிறது.

கிராம சேவகரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

??????????மட்டக்களப்பு சிவபுரத்தில் கிராமசேவை உத்தியோகத்தர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று அமைதியான முறையில் முன்னெடுக்கப் பட்டிருந்தது.

கடந்த 15.04.2016 சனிக்கிழமை இரவு மர்மமான முறையில் கிராமசேவை உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். குறித்த கிராம சேவை உத்தியோகத்தரின், மரணச் சடங்கு மகிழுரில் உள்ள அன்னாரது இல்லத்தில் நேற்று நடைபெற்று பின் அவர் கடமை புரிந்த மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலகத்திகு அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டது. இந்நிலையில் இன்றுகாலை மண்முனை தென்எருவில்பற்று பிரதேசத்தில் கடமைபுரியும், பிரதேச செயலர் கலநிதி. எம்.கோபாலரெத்தினம். அரச உத்தியோகஸ்தர்கள், அகில இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்கள் அனைவரும் கறுப்புபட்டி பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எமது சக உத்தியோகஸ்தரின் மரண விசாரணையைத் துரிதப்படுத்துங்கள், இனிமேலும் இந்த இரத்த வெறியாட்டம் வேண்டாம், அரசே கிரம உத்தியோகஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கு, பொதுமக்கள் சேவகனுக்கு கிடைத்த பரிசா இது, கயவர்களைக் கைது செய் போன்ற பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை எந்தியவாறு பிரதேச செயலகத்திலிருந்து களுவாஞ்சிகுடி நகர் வரை சென்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.