இனப்பிரச்சனைக்கு தீர்வு அறிவு பூர்வமாக இருக்க வேண்டும் – விக்னேஸ்வரன்

c.vஇலங்கை இனப்பிரச்சனைக்கானத் தீர்வு அறிவு பூர்வமாக அணுகப்பட வேண்டுமேயன்றி, உணர்ச்சி பூர்வமாக அணுகப்படக் கூடாது. உணர்ச்சி பூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்போது அது பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் என விக்னேஸ்வரன் இன்று வட மாகாண சபையில் கூறினார்.

இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துவரும் வேளையில், பல கலந்துரையாடல்களுக்கு பிறகு தமது கருத்துக்களை வடமாகாண சபை இன்று வெளியிட்டுள்ளது.

மிகவும் கடுமையான உள்நாட்டுப் போரிலிருந்து தமிழ் சமூகம் மீண்டுவர முயன்றுகொண்டிருக்கும் வேளையில், நல்லிணக்கம் ஏற்பட சிங்கள சமூகம் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

தமது தரப்பால் அரசியல் சாசனம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆனால் முதலமைச்சரை கைது செய்ய வேண்டும் எனும் கருத்துக்கள் சில சிங்களத் தரப்பிடமிருந்து வருவது குறித்த கவலையையும் அவர் வெளியிட்டார்.

நாட்டைப் பிரிக்காமல், தனித்து வாழும் அதே நேரம் அனைத்து மக்களுடன் இணைந்துவாழவே தாங்கள் ஆசைப்படுவதாகவும், அதை மையப்படுத்தியே தமது தரப்பால் அரசியல் சாசனத்துக்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் மாகாண சபையில் நடைபெற்ற விவாதத்தின்போது அவர் கூறினார்.

இலங்கையில் மாகாண சபைகள் என்ற ஆட்சி முறை இருந்தாலும், அவற்றுக்கு உண்மையான அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரங்கள் இல்லாமல் இருக்கும் நிலை, புதிய அரசியல் சாசனத்தின் மாற்றப்பட வேண்டும் எனவும் வடமாகாண சபை கோரியுள்ளது.

மூதூரில் தமிழ்-சிங்கள விவசாயிகள் மோதல்

sinhala_farmers tamil_farmersஇலங்கையின் கிழக்கே தமிழ்-சிங்கள விவசாயிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக நேற்று பலமணி நேரம் அங்கு பதற்ற சூழல் நிலவியுள்ளது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆனாலும், கிழக்கு மாகாணத்தில் காணி உரிமை இன்னும் பெரிய பிரச்சனையாகவே உள்ளது. காணி பிரச்சினைகள் காரணமாக மூவின மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக உரசல்கள் ஏற்படுகின்றன.
அவ்வகையில் வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டம் மூதூர் படுகாடு பகுதியிலும் தமிழ்-முஸ்லிம் விவசாயிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும்.

அங்கு பலமணி நேரங்கள் அமைதியற்ற சூழலை காவல்துறையினரின் கவனத்துக்கு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் கொண்டுசென்ற பின்னர், அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பை சமாதானப்படுத்தியுள்ளனர்.

போரின் காரணமாக விவசாயம் செய்யமுடியாமல் போன காணிகளின் உரிமைகளை தமிழ் மற்றும் சிங்கள விவசாயிகள் கோருவதால் அங்கு பிரச்சனை ஏற்பட்டது எனவும்.
இதனால் தமது காணி உரிமைகள் மறுக்கப்படுவதாக தமிழ் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக இஸ்லாமிய நாடுகளிடம் உதவிக் கோரிக்கை

muslimவிக்கினேஸ்வரன் வடக்கு – கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருவது முஸ்லிம்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஏ.எம். ஜெமீல் கூறுகின்றார்

இலங்கையில் அறிமுகமாகக் கூடிய புதிய அரசியல்சாசனத்தில் முஸ்லிம்களின் அரசியல் அபிலாiஷகளை அடைவதற்கு அமைச்சர் ரிஷhத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் நாடுகளின் உதவியை நாடுகின்றது.ரிஷhத் பதியுதீன் தலைமையிலான அக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று சவுதி அரேபியா சென்று 57 முஸ்லிம் நாடுகளை கொண்ட இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் இருப்பும் சர்வதேச மத்தியஸ்தம் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

புதிய அரசியல் சாசனத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வாக வடக்கு-கிழக்கு இணைப்பு இருக்கக் கூடாது, தற்போதுள்ளது போன்று இரண்டு மாகாணங்களும் தனித் தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அரசியல் அபிலாiஷ என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறுகின்றது.

அண்மைக் காலமாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் வடக்கு – கிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருவது முஸ்லிம்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இச் சந்திப்புகளில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அக்கட்சியின் துணைத் தலைவர் ஏ.எம். ஜெமீல் கூறுகின்றார்.

இதனை முறியடிப்பதற்கான முன் நடவடிக்கையாகவே இலங்கைக்கு உதவும் நாடுகள் உட்பட முஸ்லிம் நாடுகளின் உதவியை தாங்கள் நாடியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் பின்புலம் இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறுகின்றது.

இலங்கை முஸ்லிம்களுக்கான ஒரேயொரு சர்வதேச சக்தி இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு என தங்களின் சந்திப்புகளின்போது வலியுறுத்திக் கூறியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக செவிமடுத்த முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள், புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் பாதுகாப்பும் இருப்பும் உறுதிப்படுத்தப்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என உறுதிமொழியும் உத்தரவாதமும் அவர்களால் தரப்பட்டதாகவும் ஏ. எம். ஜெமீல் கூறுகின்றார்.