Header image alt text

முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை- அ.இ.ம.கா

acmc_rishadஇலங்கையில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களை உள்ளடக்கி, முஸ்லிம் மக்களுக்கான தனி நிர்வாக மாவட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரியுள்ளது. இது விடயமாக அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அப்படியான ஒரு நிர்வாக மாவட்டம் தற்போது நாட்டில் இருக்கும் 25 நிர்வாக மாவட்டங்களுக்கு அப்பாற்பட்டு 26-ஆவதாகவோ அல்லது தென்கிழக்கு கரையோரம் தனியான நிர்வாக மாவட்டமாகவோ இருக்கலாம் என்று அக்கட்சியின் உயர்நிலைக் குழு தெரிவித்துள்ளது. Read more

இனவாதத்தை மீண்டும் மேலெழுப்பும் ததேகூ – விஜித்த ஹேரத்
 
Kerathமாகாண சபையினால் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய வட மாகாண சபை தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து வட பகுதி அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமக்கு ஒரே ஒரு காரணியாக இருக்கும் இனவாதத்தை மீண்டும் மேலெழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், மக்கள் விடுதலை முன்னணி உயர் நீதிமன்றத்திற்கு சென்றமையாலேயே வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முடிந்தது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் இனவாதிகள் தனிநாடு, வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற தந்திரங்களை பயன்படுத்தி மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர் எனவும் விஜித்த ஹேரத் இங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

சிறுமி துஷ்பிரயோகம் – மூவர் கைது

Capture12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் மூவரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்படி, சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்தின் பேரில் ஒருவரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலையில் ஏழாம் வகுப்பில் கல்வி பயிலும் இச் சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 14 கோடி பெறுமதியான ஆடைகள் கொள்ளை – ஒருவர் கைது
 
arrestஅனுராதபுரம் – ஹிதோகம பிரதேசத்தில் ஆடை நிறுவனம் ஒன்றில் சுமார் 14 கோடி ரூபா பெறுமதியுடைய ஆடைகள் கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஹிதோகம பொலிஸார் பிரதான சந்தேகநபரை ஆடிஅம்பலம் பகுதியில் வைத்து கைதுள்ளனர். கடந்த 02ம் திகதி இரவு குறித்த ஆடைத் தொழிற்சாலையில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதேவேளை கைதானவர் வசம் இருந்து கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் 15,774 பெண்களுக்கான ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் இதனுடன் தொடர்புடைய மேலும் நால்வரை கைதுசெய்வது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மலையக மக்களுக்காக 4000 தனி வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல்

malaiyagamஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்புக்காக, அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா – பூண்டுலோயா – டன்சினன் தோட்டத்தில் நடைபெற்றது.

மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹா பிரதம அதிதியாக கலந்து கொண்டு, இந்த வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக 404 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக் கல்லை நாட்டி வைத்தார்.

அத்தோடு இலங்கைக்கான கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன், அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

போதை மாத்திரை விற்பனை – முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது
 
policeவாழைச்சேனை பிரதேசத்தில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படும் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதுடன் அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒன்பது வகையான மாத்திரைகளும் கஞ்சா சிறிய கட்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் என்றும் இவர் யுத்த காலத்தில் காயமடைந்து கடமை செய்ய முடியாது என்ற மருத்துவ அறிக்கையின் பிரகாரம் சம்பளம் பெற்று வரும் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் தெரியவந்துள்ளது.

இவருடன் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பஸ் தரிப்பு நிலையத்தைத் திறக்க எதிர்ப்பு – மட்டக்களப்பு
 
manmunaiமட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழாவுக்கு எதிப்புத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது. Read more