Header image alt text

 

தந்தை செல்வாவின் 39ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)

39 th thanthai selva 26.04 (7)தந்தை செல்வாவின் 39ஆவது நினைவு நாளான இன்றுகாலை 9.00மணிக்கு யாழ்ப்பாணம், தந்தை செல்வா சதுக்கத்திலுள்ள நினைவிடத்தில் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் இடம்பெற்றது. தந்தை செல்வா அறங்காவலர் குழுத் தலைவர் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்களது தலைமையில் இந் நினைவுதின நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தந்தை செல்வாவின் புத்திரர் சந்திரகாஸன், ரொறன்ரோ பல்கலைக் கழகப் பேராசிரியர் வணபிதா கலாநிதி ஏ.ஜே.சந்திரகாந்தன்,

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தந்தை செல்வா அறங்காவற் குழு உறுப்பினர் வி.ஜி.தங்கவேல், இந்தியத் துணைத் தூதுவர் அ.நடராஜன், மௌலவி எம்.ஐ .மஹ்மூத் (பலாஜி), அருட்தந்தை இமானுவல் செபமாலை அடிகள், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வடமாகாண சபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், இ.ஆர்னோல்ட், எஸ்.சிவயோகன், தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் அமைப்பாளர் க.அருந்தவபாலன், வலி தெற்குப் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச தவிசாளர் தி.பிரகாஷ், வலி. வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன், வலி. மேற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சனி ஐங்கரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் திருமதி. கோமதி ரவிதாஸ், வலி.வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லயன் சி.ஹரிகரன் தந்தை செல்வா அறங்காவற் குழுவின் செயலாளர் பேராசிரியர் ச.சத்தியசீலன் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

 

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் ஏழாலை மக்களுடன் சந்திப்பு- (படங்கள் இணைப்பு)

DSC02493கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறியும் நிகழ்வின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (24.04.2016) ஏழாலையில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.

புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஏழாலை பிரதேச சமூக சேவையாளரும், முன்னைநாள் புகையிரத திணைக்க உத்தியோகத்தருமான திருஞானசம்பந்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், முன்னைநாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரகாந்தன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஏழாலைக் கிராம மக்களுடன் இன்றைய அரசியல் சூழ்நிலைகள், அரசியல் தீர்வுத் திட்டங்கள், காணிப் பிரச்சினைகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் மக்களின் பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. Read more

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் சாவகச்சேரி வைத்தியசாலையின் நிலைமைகள் ஆராய்வு-(படங்கள் இணைப்பு)

20160422_112000யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கடந்த 22.04.2016 வெள்ளிக்கிழமை அன்று விஜயம் செய்திருந்த புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்

வைத்தியசாலையை பார்வையிட்டு அங்கிருக்கின்ற குறைபாடுகள் தொடர்பாக டொக்டர் குகதாசன் அவர்களின் தலைமையிலான வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது வைத்திய அதிகாரிகள் அங்குள்ள குறைபாடுகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் என்பன தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களிடம் தெரிவித்தார்கள். இது சம்பந்தமாக சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். Read more

தம்பசிட்டி சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக பரிசளிப்பும், கலைநிகழ்வும்-(படங்கள் இணைப்பு)

P1370039யாழ். தம்பசிட்டி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் 109ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வினை முன்னிட்டு தம்பசிட்டி தசாவதானி கதிரவேற்பிள்ளை சனசமூக நிலைய சதாவதானி அரங்கில் பரிசளிப்பு விழாவும் கலைவிழாவும் கடந்த 21.04.2016 திரு. கஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. நடராஜன், கலாநிதி சர்வானந்தன், ரி.ராமேஸ்வரன் (செயலாளர், நகராட்சி மன்றம்) ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இதன்போது பரீட்சைகளில் விசேட சித்திபெற்ற பிள்ளைகளுக்கான பரிசளிப்பும் பிள்ளைகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதில் பெருமளவிலான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர். Read more

சங்கலியன் தோப்பில் தமிழக பட்டிமன்ற புகழ் ராஜா மற்றும் பாரதி பங்கேற்புடன் பட்டிமன்றம்-(படங்கள் இணைப்பு)

IMG_3797யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பில் தமிழக பட்டிமன்ற புகழ் ராஜா மற்றும் பாரதி ஆகியோரின் பங்கேற்புடன் பட்டிமன்றம் ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

இதன்போது புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன்,

தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன், வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோ ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பட்டிமன்றவாத குழுவினரை கௌரவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

சமஷ்டி என்ற பேச்சுக்கே தயாரில்லை- சிறீலங்கா சுதந்திரக் கட்சி-

mahinda samarasingheஇலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறை பற்றி பேச்சு நடத்துவதற்கு கூட ஆளும் பிரதான கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என்று அக்கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. ஃபெடரல் ஆட்சிமுறை பற்றி பேசுவதற்கு நாம் தயாராக இல்லை. அதனால், நாம் வென்றெடுத்துள்ள அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை, ஸ்திரமற்ற நிலைக்குத் தான் செல்லும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 13-ம் திருத்தம் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கி நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்ற அதிகாரங்களை வழங்குவது பற்றி பேச்சு நடத்தினாலும் சமஷ்டி முறைக்கு ஒருபோதும் தமது கட்சி ஒத்துழைப்பு அளிக்காது என்றும் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். மாகாண சபைகள் தேவையானால் தீர்மானங்களை நிறைவேற்றி இங்கு அனுப்ப முடியும். ஆனால், எமது தரப்பிலிருந்து எந்தவிதமான ஒத்துழைப்பும் கிடைக்காது. வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கும் சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது என்று அரசாங்கத்தின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக உள்ள மஹிந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சுவீடன் தூதரகத்தை அமைக்குமாறு கோரிக்கை-

swedenசுவீடன் தூதரகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டுமென சிவில் சமூகத்தினர் சுவீடன் வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யாழிற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். அந்த விஜயத்தின்போது, யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அந்த சந்திப்பின் போது, முன்னைய காலத்தில் சுவீடன் தூதரகத்தினால் பல நன்மைகள் பெற்றுக்கொண்டதன் காரணத்தினால், இங்கு தூதரகம் அமைப்பது பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வழியமைக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன், யாழ். மாவட்ட தண்ணீர்ப் பிரச்சினைகள் மற்றும் போரின் பின் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், உட்பட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர். அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் செவிமடுத்த அமைச்சர், சிவில் சமூகத்தின் கருத்துக்களை தான் பெறுமதி மிக்கதாக ஏற்றுக்கொண்டு, தனது பலத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை, உரிய அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கையெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்திற்கு பூட்டு-

kenany universityகளனிப் பல்கலைக்கழகத்தை ஒரு வாரமளவில் தற்காலிகமாக மூட, பல்கலைக்கழக நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் பிரதான வைத்திய அதிகாரிகள் மற்றும் களனி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அறிவுரைப்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழக விடுதியில் பரவிய ஒருவகை நோயே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. இதன்படி, இன்று முதல் மே மாதம் 3ம் திகதி வரை பல்கலைக்கழகம் மூடப்படவுள்ளதோடு, மே மாதம் 04ம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பல்கலைக்கழக உபவேந்தர், மூத்த பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார கூறியுள்ளார். இதேவேளை, பல்கலைக்கழக விடுதியிலுள்ள அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 05.00 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னாள் சபாநாயகர் எம்.எச் மொஹமட் காலமானார்-

mohamedமுன்னாள் சபாநாயகரும், அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச் மொஹமட் தனது 95 ஆம் வயதில் இன்று காலமானார். கொழும்பு மாநகர சபையூடாக அரசியலில் பிரவேசித்த அவர் மாநகர சபையின் மேயராகவும் பதவிவகித்துள்ளார். பின்னர் பாராளுமன்றத்திற்கு தெரிவான எம்.எச்.மொஹமட், டட்லி சேனாநாயக்க அரசாங்கத்தில், தொழில் மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். மேலும் பல அமைச்சுப் பதவிகளையும் வகித்திருந்த எம்.எச்.மொஹமட் பாராளுமன்றத்தின் 14 ஆவது சபாநாயகராக செயற்பட்டார். பொரளை பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அன்னாரின் வீட்டில் ஜனாசா வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் குப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள், தையல் இயந்திரம் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

e2நேற்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமைக் காரியாலத்தில் வைத்து பாடசாலை மாணவர்கள் நான்கு பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் தையல் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் தமது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி புரியும் முகமாக துவிச்சக்கர வண்டிகள் மற்றும் தையல் இயந்திரம் என்பவற்றை தந்துதவுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வட்டு இந்துக் கல்லூரி வட்டு மத்திய கல்லூரி வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை மற்றும் மூளாய் சுப்பிரமணிய வித்தியசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கான மேற்படி உதவிகள் வட்டு இந்து வாலிபர் சங்க தலைமைக் காரியாலத்தில் வைத்து 24.04.2016 அன்று சங்கத்தின் தலைவரது தலைமையில் வழங்கப்பட்டது.

மேலும் வட்டு இந்துக் கல்லூரி விசேட கல்வி பயில்வோரின் அலகிற்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதற்கான நிதி அன்பளிப்புக்களை வட்டுக்கோட்டையச் சேர்ந்த வள்ளிபுரம் (36500ரூபா) மானிப்பாயைச் சேர்ந்த நாகமணி இராஜேஸ்வரி (10000ரூபா) மற்றும் புலம்பெயர் உறவுகளான இந்தியாவைச் சேர்ந்த அழகர் ஈஸ்வரன் (10000ரூபா) அமெரிக்காவைச் சேர்ந்த சி.சிவநாதன் (10000ரூபா) ஆகியோரால் வழங்கப்பட்டிருந்தது. எமது மாணவச் செல்வங்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக உதவிய உறவுகளுக்கு எமது சங்கத்தின் சார்பிலும் மாணவர்கள் மற்றும் பாடசாலைகளின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்) Read more