பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் சாவகச்சேரி வைத்தியசாலையின் நிலைமைகள் ஆராய்வு-(படங்கள் இணைப்பு)
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கடந்த 22.04.2016 வெள்ளிக்கிழமை அன்று விஜயம் செய்திருந்த புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்
வைத்தியசாலையை பார்வையிட்டு அங்கிருக்கின்ற குறைபாடுகள் தொடர்பாக டொக்டர் குகதாசன் அவர்களின் தலைமையிலான வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது வைத்திய அதிகாரிகள் அங்குள்ள குறைபாடுகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் என்பன தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களிடம் தெரிவித்தார்கள். இது சம்பந்தமாக சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.