பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் ஏழாலை மக்களுடன் சந்திப்பு- (படங்கள் இணைப்பு)

DSC02493கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறியும் நிகழ்வின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (24.04.2016) ஏழாலையில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.

புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஏழாலை பிரதேச சமூக சேவையாளரும், முன்னைநாள் புகையிரத திணைக்க உத்தியோகத்தருமான திருஞானசம்பந்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், முன்னைநாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரகாந்தன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஏழாலைக் கிராம மக்களுடன் இன்றைய அரசியல் சூழ்நிலைகள், அரசியல் தீர்வுத் திட்டங்கள், காணிப் பிரச்சினைகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் மக்களின் பல்வேறு கேள்விகளுக்கும் உரிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. DSC02488DSC02497 DSC02504 DSC02511