Header image alt text

உலக பாட்டாளி மக்கள் தினம் -2016

Captureஇன்றைய நாள் உலக பாட்டாளி வர்க்கத்தின் வெற்றித் திருநாள், சிந்திய வியர்வைத் துளிகளுக்கு பெருமை கிடைத்த உலக வரலாற்று பெருமைமிக்க நாள். ஒவ்வோர் தொழிலாளர்கள் கைகளிலும் இவ் உலகின் உயர்ச்சி தங்கியுள்ளது என்பதனை நிறுவும் நாள். இவ் நாளில் ஒவ்வோர்வரும் பாட்டாளி வர்க்கத்தினரும் அணிசேர்த்து அவர்கள் தம் பெருமையினையும் புகழினையும் உலகறியச் செய்ய முயற்சிக்க வேண்டும். இவ் வகையில் இவ் இலங்கைத் தீவிலும் தமிழ் தேசியத்தின் வழி நின்று வன்கொடுமைகளாலும், வன் கொடூரங்களாலும் அவலப்பட்டு வடுக்கள் மாறாத நிலையில் வாழ்ந்து வரும் எம் தொழிலாளர் வர்க்கத்திற்கு உயிர்ப்பூட்டி அவர்கள் எதிர்கால நம்பிக்கைகளோடு வாழ வழி ஏற்படுத்திட வேண்டும். கடந்துவிட்ட காலங்களில் எங்கள் வரலாறுகள் தந்த பல அனுபவங்களை வழிகாட்டியாக கொண்டு நிகழ்காலத்தினை வழி நடாத்துவதோடு எதிர்காலத்தினையும் செம்மைப்படுத்த முயல வேண்டும்.

விளைந்து மகிழ்ந்த எம் விளை நிலங்களில் மீண்டும் விளைவுகண்டு மகிழ்ந்திடவும், அலை அன்னைமீதினில் நிலவு வழிகாட்டிட வீசிய வலைகள் மீண்டும் விளைவை தந்திடவும், அழிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட முல்லைகளில் மீண்டும் செழித்து சிறந்திடவும், கபளீகரம் செய்யப்பட்ட எம்மவர் நிலங்கள் மீண்டு வந்திடவும், காணாமல் ஆக்கப்பட்டோரின் கண்ணீர் துளிகளுக்கு மீட்சி கிடைத்திடவும், சிறைகளில் விடுதலைக்கு ஏங்கி நிற்கும் உள்ளங்களுக்கு உரிய பதில் கிடைத்திடவும், பெண் கொடுமைகளுக்கு முற்று வைத்திடவும், சுரண்டப்பட்டு சூறையாடப்பட்ட மற்றும் சூறையாடப்பட்டு வரும் எம் தொழிலாளரின் உழைப்பிற்கு உரிய தீர்வு கண்டிடவும், நாட்டின் நல்லாட்சி உறுதிப்பட்டிடவும், எம் இன இலட்சியம் நிறைவு கண்டிடவும் அனைவரும் நாம் தமிழர்கள் என்ற இன ஒற்றுமையால் உறுதி கொண்டு இவ் நாளில் எம் கோசங்களை வானுயர உயர்த்துவோம். என்றும் தமிழ் அன்னையின் புதல்வியாய்,

திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன்,
முன்னாள் தவிசாளர்,
வலி மேற்கு பிரதேச சபை
(தமிழ் தேசிய கூட்டமைப்பு)

முன்னாள் புலி உறுப்பினர்கள் கைதானமை தொடர்பாக பாதுகாப்பு செயலாளர்-

karunasenaமுன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிராந்தியத் தளபதிகள் சிலர் கைதுசெய்யப்பட்டமை யாழில் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காகவே என, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரே இவர்களை கைதுசெய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், சாவகசேரி நீதிமன்றத்தால் இன்றுபகல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கீதா குமாரசிங்க, சாலிந்த திஸாநாயக்க பதவி நீக்கம்-

dsdfdfdffஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், அக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி, புதிதாக நியமனம்பெற்றவர்களின் விபரம் வருமாறு,

கம்பஹா மாவட்ட அமைப்பாளர் – பிரதீப் ஜெயவர்த்தன
கிரியால ஆசன அமைப்பாளர் – வடமேல் மாகாண சபை உறுப்பினர் கமல் இந்திக்க
கொழும்பு மாவட்ட அமைப்பாளர்கள் – மேல் மாகாண முன்னாள் உறுப்பினர் காமினி டி சில்வா மற்றும் புத்திக இத்தமல்கொட
களுத்துறை மாவட்ட அமைப்பாளர் – மனுல சமல் பெரேரா
காலி மாவட்ட அமைப்பாளர் – பியல் தர்ஷன குருகே
கேகாலை மாவட்ட அமைப்பாளர் – நலின் புஷ்பகுமார
குருநாகல் மாவட்ட அமைப்பாளர் – துஷார திலகரத்ன
பெந்தர – எல்பிடிய இணை அமைப்பாளராக – பெந்தோட்டை பிரதேசசபையின் முன்னாள் தலைவர் கயான் கிரிஷான் சிறிமான்ன
மற்றும் எல்பிடிய பிரதேசசபையின் முன்னாள் தலைவர் அமில ஹர்ஷன

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்-

e444மாலபே மருத்துவக் கல்லூரியை இரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர்கள்மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டு விரட்டியடித்துள்ளனர். மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வைத்தியப்பீட மாணவர்கள் பேரணியினை முன்னெடுத்திருந்தனர். இதன்மீது கண்ணீர்புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை வரைக்கும் பேரணியாக வந்து கொண்டிருந்துள்ளனர். அவர்கள், ஜனாதிபதி செயலகம் வரைக்கும் பேரணியாக செல்வதற்கு முயன்றபோதே, லோட்டஸ் சுற்றுவட்டத்தில் வைத்து, பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்குண்டு பிரயோகித்தும், தண்ணீர்தாரை பிரயோகம் செய்தும் விரட்டியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யோஷித தொடர்பில் கடற்படை விசாரணை-

yosithaபாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்குப் பின்னர், யோஷித ராஜபக்ஷ தொடர்பில், கடற்படையினரின் விசாரணை ஆரம்பிக்கப்படும் எனவும் அதுவரையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் படைத்தரப்பு அறிவித்துள்ளது. கடற்படையின் கெடெட் அதிகாரியாக அவர் சேர்வதற்கான தகுதிகள் இருந்தனவா? அவை தொடர்பில் படைத்தரப்பு ஆய்வு செய்துள்ளதா? மற்றும் அவரது கடவுச்சீட்டு ஆகியன தொடர்பிலேயே, கடற்படையினர் விசாரணை நடத்தவுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல், கடற்படையிலிருந்து யோஷித ராஜபக்ஷ, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் மீதான நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளைத் தொடர்ந்து, கடற்படையின் விசாரணைகள் ஆரம்பிக்கும் என்றும் படைத்தரப்பு கூறியுள்ளது.

சமஷ்டி பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி நிராகரிக்கிறது-

rilwin silvaவட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கை இணைப்பதற்கான சமஷ்டி பிரேரணையை நிராகரிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரேரணைகளுக்கும், சமாதானத்தை சீர்குழைக்க முயற்சிக்கும் எந்தவொரு பிரேரணைக்கும் மக்கள் விடுதலை முன்னணி தமது ஒத்துழைப்பை வழங்காது எனவும் அவர் கூறியுள்ளார். மக்களுடன் இணைந்து செயற்படுவதே மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கம் எனவும் இந்த ஊடகவியலளார் சந்திப்பின் போது கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விமானப் படையின் ஹெலிக்கொப்டர் விபத்து-

sasassபொலநறுவை மாவட்டம் ஹிங்குராக்கொட விமானப்படை முகாமுக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை, குறித்த ஹெலிக்கொப்டரை அவசரமாக தரையிறக்க முற்பட்ட போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஹெலிக்கொப்டர் சிறிதளவு சேதம் அடைந்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இந்த விபத்தினால் எவருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புக்களே ஏற்படவில்லை என, விமானப் படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பில் தற்போது விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தின்பேரில் 27 இளைஞர்கள் கைது-

788யாழில் 27 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். யாழ் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில் சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்த காரணத்தினால், வீதிகளில் அநாவசியமாக நிற்பவர்கள், திருட்டு மற்றும் பெண்களுடனான சேட்டைகளில் ஈடுபடுபவர்கள் என பலர் தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டு வருகின்றார்கள். யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான விஷேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அக்குழுவினர் பல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். Read more