Header image alt text

புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம், ஒஸ்கா முன்பள்ளி விளையாட்டுப் போட்டி-(படங்கள் இணைப்பு)

10 wardsமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒஸ்கா முன்பள்ளி சிறார்களின் இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. க.சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

மேற்படி விளையாட்டுப் போட்டி நிகழ்வில் முன்பள்ளிகளுக்கான வலயக்கல்விப் பிரதிப் பணிப்பாளர், வலயக் கல்வி உதவி விளையாட்டுப் பணிப்பாளர்,

வன்னி மேம்பாட்டுக் கழகத் தலைவர், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

முன்னாள் போராளிகளது கைது நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது-பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்- (ரி.விரூஷன்)

D.Sithadthan M.P,.புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீளவும் கைது செய்யப்படுகின்ற நடவடிக்கையானது மக்கள் மத்தியில் அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் அண்மைக் காலமாக கைதுசெய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளானது கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றதைப் போன்றே காணப்படுகின்றது.

புதிய நல்லாட்சி அரசாங்கத்துக்கு மக்கள் வாக்களித்ததன் காரணம், தமக்கு கடந்த ஆட்சிக் காலத்திலிருந்த நிம்மதியற்ற வாழ்க்கை நீங்கி சுமுகமான நல்வாழ்க்கை கிடைக்குமென்ற நம்பிக்கையில்தான். ஆனால் தற்போதைய அரச ஆட்சியில் இடம்பெறுகின்ற இக் கைதுகளால் மக்களிடையே பொதுவான ஓர் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன் இவை பழைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஞாபகப்படுத்துவதாகவே உள்ளன. இக் கைது நடவடிக்கைகள், கடத்தல் செயற்பாடுகள் போன்றே இடம்பெற்று வருவதைக் காணமுடிகின்றது. எனவே அரசாங்கம் மக்களுக்கு ஏன் இக் கைதுகள் இடம்பெறுகின்றன?

Read more

மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் கிராம அபிவிருத்தி திணைக்களங்கள் மற்றும் மாதர் சங்கங்களுக்கு உதவி-(படங்கள் இணைப்பு)

t6767முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு மற்றும் ஒட்டிசுட்டான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்பவற்றுக்கு

வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான 2015ஆம் ஆண்டின் மூலதன நன்கொடை நிதியிலிருந்து தளபாடங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் அவர்களுடன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமசபைத் தலைவர், செயலாளர், ஊர்ப் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

சூரிச் மாநகரில் “புளொட்” அமைப்பினர் கலந்து கொள்ளும் மாபெரும் மேதின ஊர்வலம்-

PLOTE.Swiss Maydayமே 1 தொழிலாளர் தினம் – 2016
சூரிச் மாநகரில் மாபெரும் மேதின ஊர்வலம்,
01.05.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு…
தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! கழகத் தோழர்களே! தோழமைக் கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2016 மே முதலாம் திகதி சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொள்ளும் தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்து கொண்டு, இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்க சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பைச் செய்யக்கோரி குரல் கொடுத்து எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்கு இட்டுச்செல்ல வலுச்சேர்ப்போமாக!

எம் ஒவ்வொருவரையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையில் உள்ளோமென்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிவோம். அந்த வகையில் கடமையுணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் தம்மாலியன்ற பங்களிப்பினை செய்ய வேண்டும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தோழமையுடன் கேட்டுக் கொள்ளும் அதேவேளையில், மக்களின் விடுதலைக்கு தோள் கொடுக்க விரும்பும் அனைவரையும் இவ் மேதின ஊர்வலத்திற்கு தோழமையுடன் அழைக்கின்றோம்.
Read more

பிரியங்கர ஜயரட்ன, நிஷாந்த விக்ரமசிங்க ஆகியோரிடம் விசாரணை-

janathipathi anaikuluபல்வேறு குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்டம், பொது ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஆகிய இருவரும் பாரிய மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2014ம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பகல் போசனம் வழங்குவதற்காக 330,000 ரூபா நிதி மற்றும் தன்னுடைய சொந்த வீட்டில் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்பட்ட 234,800 ஷரூபா நிதி ஆகியவற்றை தனது அமைச்சின் கீழ் இயங்கிய நிறுவனம் ஒன்றினூடாக செலுத்தியமை குறித்து பிரியங்கர ஜயரட்னவிடம் விசாரணைகள் இடம்பெறவிருந்தன. தனது அதிகாரத்தை பயன்படுத்தி மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தை சிங்கப்பூரினூடாக திசை திருப்பி பறக்கச் செய்தமையினூடாக பல இலட்சக்கணக்கில் நட்டம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுக்கள் குறித்து அவரிடம் விசாரணைகள் இடம்பெறவிருந்தன.

ஜூன் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி-

money...இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் இணக்கப்பட்டடுக்கு வந்துள்ளது. இதுதொடர்பில் இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஓர் உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது. கூடுதல் வட்டிக் கடன்களைக் குறைந்த வட்டிக் கடன்களாக மாற்றுதல் உட்பட நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி பெறும் ஒப்பந்தம் ஒன்று இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ளது என புளும்பேர்க் பொருளாதார அவதானிப்பு நிலையம் கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி எதிர்வரும் ஜூன் மாதம் கிடைத்தவுடன் இந்த நிதித்தொகை வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறுகையில், கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து விடயங்களும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும், கடனை பெற்றுக்கொள்ளும் காலம் மற்றும் பெற்றுக் கொள்ளும் விதம் தொடர்பில் மாத்திரம் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டி இருப்பதாகவும் கூறியுள்ளார். எதிர்வரும் சில தினங்களுக்குள் நற்செய்தி ஒன்றை அறிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்

பரந்தன் பிரதேச காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு-

weeweகிளிநொச்சி பரந்தன் பிரதேசத்திலுள்ள காணி ஒன்றிலிருந்து இன்று முற்பகல் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணியின் மலசலகூட கிடங்கிலிருந்து இந்த வெடிபொருட்களை இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இதற்கமைய எல்.எம்.ஜே ரவைகள், மகசின் தோட்டாக்கள், துப்பாக்கியின் பாகங்கள், பழைய ஷெல் ஆகியவற்றையே இராணுவம் மீட்டுள்ளது. குறித்த காணியின் உரிமையாளரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடக சுதந்திர தினம் – வைகாசி -2016-

mrs ainkaran (7)இன்றைய நவீன ஜனநாயக உலகின் நிலைபேறு தன்மையில் ஊடகம் என்பது மிக முக்கிய தாங்கு தூணாக செயற்பட்டு வருகின்றது. பெறப்படுகின்ற தகவல்களின் உண்மைத் தன்மையினை உறுதிசெய்து சமூகத்தில் விழிப்புணர்வையும் சமூகத்தின் பொறுப்புணர்வையும் ஏற்படுத்துவதில் ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்களின் பணி என்பது வெறும் வார்த்தைகளால் குறிப்பிட்டு விட முடியாத ஒன்றாகும். ஊடகம் என்பது ஒர் வழிகாட்டியாகவும் ஊடகவியலாளர்கள் சமூகத்தின் ஓர் முழுநேரப் போராளியாகவும் செயற்பட்டு என்றும் மக்களின் மனங்களில் இடம் பெற்றுள்ளனர். கடந்த காலங்களில் ஆயுதப்போராட்டங்கள் முனைப்புப் பெற்றிருந்த வேளை அதற்கு மேலும் வலுச் சேர்ப்பிக்கும் நிலையில் ஊடகங்கள் தொழிற்பட்டமை எமது தேசத்தின் பின்நோக்கிய வரலாற்றில் பதிவுகளாகவும் வரலாற்று தடயங்களாகவும் நிலைபெற்றிருக்கின்றது. இவ் காரணத்தினாலேயே பல ஊடகவியலாளர்கள் இன வஞ்சகம் கொண்ட காட்டேறிகளால் படுகொலை செய்யப்பட்டனர், தாக்கப்பட்டனர், கடத்தப்பட்டனர். இவ்வாறே ஊடகங்களுக்குள்ளும் உட்பிரவேசித்து ஆயுதங்களால் அவற்றை அழிக்க முற்பட்டனர். ஆயினும் ஊடகப்பணி சாம்பல் மேட்டிலிருந்து பறந்த பீனிக்ஸ் பறவைபோல் தனது பணியினை செவ்வனே ஆற்றி இவ் இனத்தின் இலட்சியம் நோக்கிய பாதையில் மக்களை தொடர்ந்தும் பயணிக்க வைத்ததற்கு மேலாக தொடர்ந்தும் பயணிக்கச் செய்து கொண்டே இருக்கின்றது. இதேவேளை இவ் இனத்தின் இலட்சிய கனவுகளை சர்வதேச அரங்கிற்கும் வெளிப்படுத்தியது. எமது இனத்தின் விடிவிற்காய் பேனா முனைப் போராளியாக புறப்பட்டவர்களில் நயவஞ்சகர்களால் அழிக்கப்பட்டவர்களுக்கும் அழிக்கப்பட்ட ஊடகங்களுக்குமாக இவ் புனிதமான சர்வதேச ஊடக சுதந்திர தினத்தில் ஒரு நிமிடம் மௌனிப்பதோடு ஊடகப் போராளிகளையும் ஊடகங்களையும் நினைவு கூறுவது எம் ஒவ்வோர்வருடைய கடமையாகும். இதேவேளை இல்லாது ஒழிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒர் நினைவிடம் அமைத்து அவர்களது புனித பணியினை போற்றுவோம்.
என்றும் ஊடகங்களுகக்காய்,
தமிழ் அன்னையின் புதல்வியாய்,
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன்,
முன்னாள் தவிசாளர்,
வலி மேற்கு பிரதேச சபை.

இலங்கையுடனான உறவுக்கு அமெரிக்கா முக்கியத்துவம்-

samanthaஇலங்கையுடனான உறவுக்கு ஜனாதிபதி பராக் ஒபாமா கூடுதல் முக்கியத்துவம் வழங்குவதாக ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் கூறினார். அமெரிக்க – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு பேரவையில் உரையாற்றிய போதே இவர் இவ்வாறு கூறினார். இலங்கைக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா, மிகுந்த அக்கறையுடன் இருப்பதாகவும் தேர்தல் நடந்த 16 மாதங்களில் ஜனாதிபதி மைத்திரியின் அரசாங்கம் பெரும் முன்னேற்றங்களைக் கண்டிருப்பதாகம் அவர் கூறினார். நவம்பரில் நான் இலங்கை சென்றிருந்தபோது பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பயமின்றி செயற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் கூறினர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். மக்களின் காணிகள் திருப்பிக் கொடுக்கப்படுகின்றன. பல மக்கள் மீள்குடியேறி வருகின்றனர். இவ்வாறு குறுகிய காலத்தில் பெரும் முன்னேற்றம் கண்ட, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை நான் முன்னொருபோதும் கண்டதில்ல எனவும் அவர் புகழ்ந்தார். Read more