புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம், ஒஸ்கா முன்பள்ளி விளையாட்டுப் போட்டி-(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒஸ்கா முன்பள்ளி சிறார்களின் இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாணசபை உறுப்பினர் திரு. க.சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேற்படி விளையாட்டுப் போட்டி நிகழ்வில் முன்பள்ளிகளுக்கான வலயக்கல்விப் பிரதிப் பணிப்பாளர், வலயக் கல்வி உதவி விளையாட்டுப் பணிப்பாளர்,
வன்னி மேம்பாட்டுக் கழகத் தலைவர், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.