கூட்டமைப்பு பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு-(படங்கள் இணைப்பு)

sdfdfdதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், நிர்மலநாதன் சார்ள்ஸ், சாந்தி சிறீஸ்கந்தராஜா, வைத்தியக்கலாநிதி சிவமோகன், கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன், அன்ரனி ஜெகநாதன், துரைராசா ரவிகரன் ஆகியோர்க்கும்,

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் சமாசங்களுக்குமிடையில் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர் சமாச தலைவா மரியதாஸ் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. முக்கியமாக மீனவர்களின் வாழ்வாதாரம், கரைவலைத் தொழில், இறால் பிடித்தல், அட்டை பிடித்தல், சட்டவிரோத மீன்பிடி, வெளிப் பிரதேசங்களிலிருந்து அங்கு வருகைதந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள், மீன்பிடி தொடர்பான சட்டத்தை சரிவர நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் மீனவர் சங்கத்தினரால் எடுத்துக் கூறப்பட்டது. இன்றுகாலை 9.30மணிமுதல் 11.30மணிவரை இடம்பெற்ற இச்சந்திப்பில் மீனவர்களின் குறைகளை கேட்டறிந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ சுமந்திரன், பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து தாங்கள் ஒருநாள் முழுவதும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரச்சினை சம்மந்தமாக கலந்துரையாடி தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.

dfdfd mullai 30.04.2016 (1) mullai 30.04.2016 (2) mullai 30.04.2016 (3) mullai 30.04.2016 (4) sdfdfd sfdfdfdfd wewew