வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புதுக்குடியிருப்பு ஒளிரும் வாழ்வு இல்ல பயனாளிகள் நான்கு பேருக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாற்றுதிறானளின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக இயங்கி வரும் ஒளிரும் வாழ்வு என்ற அமைப்பு தமது பயனாளிகள் நான்கு பேருக்கு மிக அவசரமாக சக்கர நாற்களிகளைத் தந்துதவுமாறு கேட்டுக்கொண்டதற்கு
இணங்க தலா 9975 ரூபா பெறுமதியான நான்கு சக்கர நாற்காலிகள் (39,900 ரூபா) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)