Header image alt text

கிளிநொச்சியில் வட மாகாண கூட்டுறவு சங்கங்களின் எழுச்சிமிகு மேதினம்-(படங்கள் இணைப்பு)

may day (8)வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவு சங்கங்களின் எழுச்சிமிகு மேதின ஊர்வலம் இன்றுபிற்பகல்; கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஆரம்பமாகி கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து மேதினக் கூட்டம் நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கத் தலைவர் அ.கேதீஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த மேதின ஊர்வலத்தில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்களான இ.பசுபதிப்பிள்ளை. பா.அரியரட்ணம், விந்தன் கனகரட்ணம், கந்தையா சிவநேசன்(பவன்), ஆர். இந்திரராஜா, எம்.பி.நடராஜா, எம்.தியாகராஜா ஆகியோரும் கூட்டுறவு உதவி ஆணையாளர் திருமதி. மதுவந்தி உள்ளிட்ட கூட்டுறவு அதிகாரிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினர், கடற்றொழில் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டார்கள். மிகப் பிரமாண்டமான இந்த ஊர்வலம் பிற்பகல் 2.30மணியளவில் கரடிபோக்கு சந்தியில் ஆரம்பமாகி கூட்டுறவுச்சங்க மண்டபத்தினை வந்தடைந்ததைத் தொடர்ந்து மாலை 4.00மணிக்கு மேதினக் கூட்டம் ஆரம்பமாகி மாலை 6.00 மணியளவில் கூட்டம் நிறைவுபெற்றது. இக்கூட்டத்தில் மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் என பலரும் உரையாற்றியதைத் தொடர்ந்து, மேதின ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்த சிறந்த ஊர்திகளுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

may day (9) may day (25)

Read more

சுவிஸில் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து “புளொட்” அமைப்பின் மேதின ஊர்வலம்- (படங்கள் இணைப்பு)

d57ea6df-8ea0-4030-ba74-b88a6eca7c2dஇன்று (01.05.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்களும், முற்போக்கு முன்னணி அமைப்புகளும் கலந்து கொண்டிருந்த மேதின ஊர்வலத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் (புளொட்) வழமை போன்று கலந்து சிறப்பித்திருந்தது. இந்தவகையில் சுவிஸ்லாந்தில் நடைபெறுகின்ற மேதின ஊர்வலங்களில் கடந்த 33 வருடங்களாக தொடர்ச்சியாக கலந்து சிறப்பித்து வரும் “புளொட்” அமைப்பினர், இவ்வருடமும் கலந்து சிறப்பித்திருந்தினர். இம்முறை மேதின ஊர்வலமானது சூரிச் கெல்வெத்தியா ப்ளாத்ஷ்க்கு அருகில் இருந்து காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி புர்கிலி பிளாட்ஸ் பெல்வியில் முடிவடைந்தது. இவ் ஊர்வலத்தில் கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி மேதின ஊர்வலத்தின் நிறைவில் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளைத் தோழர் ஜூட் அவர்களின் நன்றியறிவித்தலுடன் மேதின நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. அத்துடன் சுவிஸ் புலிகள் அமைப்பின், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பிலும் இந்த ஊர்வலத்தில் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர்.

03ef60b2-6c28-4e52-97e0-6beb9f379410 79a9ee21-d277-4337-88ce-5bbeb55c7715

Read more

யாழ். மருதனார்மடத்தில் தமிழ் தேசிய மேதின நிகழ்வு-

Captureயாழ். மருதனார்மடத்தில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய மேதின நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ். இணுவில் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து பேரணியாக ஆரம்பித்த ஊர்வலம் மருதனார்மடத்தை சென்றடைந்து, மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் மைதானத்தை அடைந்து மேதின கூட்டம் இடம்பெற்றது. மேதின ஊர்வலம் மற்றும் மேதினக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும், தொழில்சங்கவாதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். மேற்படி மேதின ஊர்வலத்தில் பெருந்தொகையான மக்களும் கலந்துகொண்டிருந்ததோடு, மாட்டு வண்டிமூலமான தொழிலாளர்களின் ஊர்வலம், தொழிலாளர் வர்க்கத்தினரை பிரதி பலிக்கும் வகையிலான கலை, கலாசார ஊர்வலங்கள், தொழிலாளர்களின் சிறப்புக்களைக் கொண்ட வாகனங்களின் பேரணிகள் என்பனவும் இடம்பெற்றன. Read more

தண்ணீருற்று கணுக்கேணியில் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிவைப்பு-(படங்கள் இணைப்பு)

DSC02893முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீருற்று கணுக்கேணி பகுதியில் பாலம் ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குமுழமுனையில் இருந்து அளம்பில் நோக்கிய பாதையில் 4 கிலோமீற்றர் வரையான துரத்துக்கு பாதை அமைப்பதற்கு தலா 60 இலட்சம் ரூபா வீதம் வடமாகாணசபை உறுப்பினர்களான

கந்தையா சிவநேசன் துரைராஜா ரவிகரன் அகமது லெப்பை யாசின் ஜவாகிர் ஆகியோரின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து மேங்கொள்ளப்படும் வேலைத்திட்டதுக்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more

அலம்பில் தங்கபுரம் பிரதேச முன்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பில் கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)

thangapuram (3)வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அலம்பில் தங்கபுரம் பிரதேச மக்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின்போது அலம்பில் தங்கபுரம் பிரதேச முன்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் மக்களுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது முன்பள்ளி மாணவ மாணவியர்க்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. Read more

புளொட்டின் மேதினச் செய்தி-

ploteமே மாதம் முதலாம் நாள் தொழிலாளர் வர்க்கத்தின் காத்திரமான போராட்டத்தினால் கிடைத்த வெற்றியை குறிக்கும் நாள். ஆனால் இப்போது தொழிலாளர்கள் தமது வெற்றிக்காக போராடும் நாளாக மீண்டும் மாற்றப்பட்டுவிட்டது.

சோவியத் ஒன்றியத்தின் உடைவு, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு துருவ உலக ஒழுங்கு, உலக தாராளமயமாக்கல், தேசிய இனங்களின் எழுச்சி என்று நாம் கண்ட அனைத்து விடயங்களுமே, தொழிலாளர்கள் என்றொரு வர்க்கத்தினர் உலகம் பூராவும் நலிவடைந்து, பிளவுபட்டு, தனித்துவங்களை இழக்க காரணமாகி விட்டதை உணர்கின்றோம்.

தேசிய இனசிக்கலில் தொழிலாளர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் மட்டுமன்றி அவர்களது ஒற்றுமையும், அமைப்பு ரீதியான செயற்பாடுகளும்கூட காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளது. இனரீதியாக, மதரீதியாக, பிரதேச ரீதியாக பிரித்து வைக்கப்பட்டு விட்டனர். தனது நலன்களை தேவைகளை முதலில் காப்பாற்றிக் கொண்டாலே போதும் என்ற மனநிலைக்குள் புகுத்தப்பட்டுள்ளனர்;. தேசிய இனகுழுக்களின் தலைவர்கள், மத அமைப்புகளின் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் உள்ளுர்த் தலைவர்கள் என்று சகலருமே இதற்கு பொறுப்பாளிகள்தான்.

Read more

புங்குடுதீவு தாயகம் அமைப்பின் நூலக திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது-

ewtrrtrயாழ். புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம் அமைப்பின் தாயகம் என்ற பெயரிலான நூலகத் திறப்புவிழா நேற்று (30.04.2016) சனிக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் திருமதி. த.சுலோசனாம்பிகை (பிரதம போசகர், தாயகம் சமூக சேவையகம், புங்குடுதீவு) அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதன்போது புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வட மாகாண ஆளுநரின் செயலாளர் திரு. இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக வரவேற்று அழைத்து வரப்பட்டு தாயகம் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல், தாயகக் கொடியேற்றம் இடம்பெற்றதோடு அதனைத் தொடர்ந்து தாயகம் நூலகம் திறந்து வைக்கப்பட்டது, இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக திரு. எஸ்.கே. சண்முகலிங்கம், (தவிசாளர் வேலணை பிரதேச மத்தியஸ்த சபை மற்றும் தாயகம் சமூக சேவையகம் பிரதம ஆலோசகர்), செல்வி. ஜெகநந்தினி முத்துக்குமாரு, (ஆலோசனை சபை உறுப்பினர், -தாயகம் சமூக சேவையகம்), திரு.அபிராஜ் வசந்தகுமார் (சுகாதார பரிசோதகர்), திரு. எஸ் சிவா (கிராம சேவகர்), செல்வி. ச.ஜனகா (கிராம சேவகர்), செல்வி. பவிஷானா, (தலைவர், -தாயகம் சமூக சேவையகம்), Read more