யாழ். மருதனார்மடத்தில் தமிழ் தேசிய மேதின நிகழ்வு-

Captureயாழ். மருதனார்மடத்தில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய மேதின நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ். இணுவில் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து பேரணியாக ஆரம்பித்த ஊர்வலம் மருதனார்மடத்தை சென்றடைந்து, மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் மைதானத்தை அடைந்து மேதின கூட்டம் இடம்பெற்றது. மேதின ஊர்வலம் மற்றும் மேதினக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும், தொழில்சங்கவாதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். மேற்படி மேதின ஊர்வலத்தில் பெருந்தொகையான மக்களும் கலந்துகொண்டிருந்ததோடு, மாட்டு வண்டிமூலமான தொழிலாளர்களின் ஊர்வலம், தொழிலாளர் வர்க்கத்தினரை பிரதி பலிக்கும் வகையிலான கலை, கலாசார ஊர்வலங்கள், தொழிலாளர்களின் சிறப்புக்களைக் கொண்ட வாகனங்களின் பேரணிகள் என்பனவும் இடம்பெற்றன. Capture ertrtrt