யாழ். கந்தரோடை மேற்கு ஞானவைரவர் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பும்-(படங்கள் இணைப்பு|)
யாழ். கந்தரோடை மேற்கு ஞானவைரவர் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கடந்த 30.04.2016 சனிக்கிழமை முன்பள்ளியின் தலைவரது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வலிதெற்கு பிரதேச சபையின் முன்னைநாள் தவிசாளர் திரு. ரி. பிரகாஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு கொடியேற்றம் மற்றும் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வெற்றிபெற்ற சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பெற்றோர் மற்றும்; கிராம மக்களும் பெருமளவில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு உற்சாகம் கொடுத்திருந்தனர்.