Header image alt text

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கலாசார நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)-

f6f6241f-8871-4447-88fd-e7220d0272d6வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கம் வகிக்கும் வவுனியா பிரதேச சம்மேளன கழகங்களின் ஒத்துழைப்புடன் மாபெரும் கலாசார மற்றும் புதுவருட விளையாட்டு விழா இளைஞர் கழகத்தின் மாவட்ட சம்மேளன முன்னாள் தலைவர் திரு ரி.அமுதராஜ் அவர்களது தலைமையில் நேற்று (07.05.2016) சனிக்கிழமை சிதம்பரபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் இறுதி நிகழ்வான பரிசளிப்பு நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தார். நிகழ்வில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், எமது பிரதேச இளைஞர்களின் ஆக்கமும், ஊக்கமும் தான் இன்றைய கலாசார நிகழ்வின் வெற்றியின் திறவுகோல். இளைஞர்களின் மூலமே சிறந்த சமூதாய கட்டமைப்பை நாங்கள் எமது கிராமங்களில் தோற்றுவித்து வளமான எதிர்காலத்தினை நாம் உருவாக்க என்றும் முயற்சி உள்ளவர்களாக திகழ வேண்டும். அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகம் தனது உயரிய சிந்தனையுடன் தொடர்ந்தும் இளைஞர்களின் முன்னேற்ற பாதைக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
Read more

வட்டு. இந்து வாலிபர் சங்கத்தினால் வீடு புனரமைப்பிற்காக 50,000 பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

0ed847a7-0272-410c-989d-0b2d2fb657f3வட்டுக்கோட்டை இந்த வாலிபர் சங்கத்தினால் கடந்தகால யுத்தத்தினால் தனது இரு கண்களையும் இழந்து நான்கு பிள்ளைகளுடன் பல இன்னல்களுடன் வாழ்ந்து வரும் கீரிமலை வீதி சித்தங்கேணியைச் சேர்ந்த மா.குணரத்தினம் என்பவருக்கு வீடு புனரமைப்பிற்கான உதவி இன்று வழங்கப்பட்டுள்ளது. மா.குணரத்தினம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த விண்ணப்பத்திற்கு அமைவாக அவரது வீடு புனரமைப்பிற்காக நேற்று சனிக்கிழமை (07.05.2016) அவரது வீட்டில் வைத்து கூரைத்தகடுகள், சீமெந்து பைகள், கம்பிகள் மற்றும் அதற்கான கூலி உட்பட சுமார் 50,083 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அன்பளிப்பினை எமது புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மாணிக்கவாசகர் ஆரூரன் அவர்கள் வழங்கியுள்ளார். இவருக்கு எமது சங்கத்தின் சார்பிலும் பயனாளி சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். மேலும் குணரத்தினத்தின் பிள்ளைகளின் எதிர்கால கல்வியை கவனத்தில் கொண்டு எமது மாதாந்த கல்வி உதவித் தொகை கொடுப்பனவு திட்டத்தில்லும் சேர்க்கப்பட்டுள்ளனர். (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)
Read more

தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன-வியாழேந்திரன் எம்.பி-(படங்கள் இணைப்பு)

2343434வடக்கு கிழக்குக்கு அப்பால் உள்ள தமிழர்களின் வரலாற்று அடையங்கள் அழிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் தமிழ்ப் புலவர் ஒளவையார் சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு வேல்முருகன் வர்த்தக நிறுவனத்தின் 40 ஆண்டுகால வர்த்தக நிறைவை பூர்த்தி செய்வதனை இட்டு வேல்முருகன் குடும்பத்தினரால் நேற்றுமாலை ஒளவையார் சிலை திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு வர்த்தக சங்கம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள வர்த்தக சங்களின் பூரண ஒத்துழைப்புடன் இந்த சிலை திறப்பு விழா சிப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள், பண்பாட்டின் அடையாளங்கள் இன்று அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. 30 வருட யுத்தத்திற்கு முன்பு மட்டுமல்ல 2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, சிதைக்கப்பட்டு வருகின்றன என்பதை நினைக்கும்போது வேதனையாகவுள்ளது. வடகிழக்குக்கு அப்பால் தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. Read more

யாழில் ரயிலில் மோதி இளம் யுவதி உயிரிழப்பு-

trainயாழ். – சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதுண்டு 18 வயது யுவதியொருவர் நேற்று இரவு 8.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த லோரன்ஸ் றெஜின்ரினா என்ற யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த யுவதி மோதுண்டுள்ளார். ரயிலில் மோதி படுகாயமடைந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் விபத்தா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மீதான இராணுவ கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது-

rrtrtrநீண்டகாலமாக இலங்கைமீது அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த இராணுவ வர்த்தக கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இக் கட்டுப்பாடுகள் இம்மாதம் 04ம் திகதி முதல் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பாதுகாப்பு வர்த்தக பிரிவினால் தளர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இலங்கையுடன் இராணுவ உபகரண கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட அமெரிக்கா இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இலங்கைக்கு இராணுவ உபகரணங்கள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியிருந்தது. எனினும் மிதிவெடி அகற்றல், இடர் முகாமைத்துவ உதவிகள், வான் மற்றும் கடல் பாதுகாப்பு சேவைகளை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியிருந்தது.

ஆசிய அபிவிருத்தி வங்கி 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி-

eeweeeஇலங்கையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை ஜேர்மனியில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் 67 நாடுகள் பங்கேற்றிருந்தன. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மாநாட்டில் பங்கேற்றிருந்தார். அடுத்த மூன்று வருட காலத்திற்கு சலுகை வட்டி அடிப்படையில் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக நேற்றையதினம் இரவு நாடு திரும்பிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

இலங்கையில் சித்திரவதை தொடர்கிறது-ஐ.நா-

asdsdsdsdsஇலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்தும் தமிழர்கள் மீதான சித்திரவதை தொடர்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை, ஏனைய வன்கொடுமை, மனிதாபிமானமற்ற தண்டனை சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மெண்டஸ் தெரிவித்துள்ளார். எட்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர், கொழும்பில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவருடன், நீதித்துறையின் சுதந்திரம் மீதான அறிக்கையாளர் மோனிகா பிண்டோவும் வருகை தந்திருந்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் (தமிழர்கள் மீதான) சித்திரவதை கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனாலும்கூட, சட்டத்தில் உள்ள ஓட்டைகள் காரணமாக இன்னும் சித்திரவதை தொடர்கிறது. Read more