வட்டு. இந்து வாலிபர் சங்கத்தினால் வீடு புனரமைப்பிற்காக 50,000 பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-
வட்டுக்கோட்டை இந்த வாலிபர் சங்கத்தினால் கடந்தகால யுத்தத்தினால் தனது இரு கண்களையும் இழந்து நான்கு பிள்ளைகளுடன் பல இன்னல்களுடன் வாழ்ந்து வரும் கீரிமலை வீதி சித்தங்கேணியைச் சேர்ந்த மா.குணரத்தினம் என்பவருக்கு வீடு புனரமைப்பிற்கான உதவி இன்று வழங்கப்பட்டுள்ளது. மா.குணரத்தினம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த விண்ணப்பத்திற்கு அமைவாக அவரது வீடு புனரமைப்பிற்காக நேற்று சனிக்கிழமை (07.05.2016) அவரது வீட்டில் வைத்து கூரைத்தகடுகள், சீமெந்து பைகள், கம்பிகள் மற்றும் அதற்கான கூலி உட்பட சுமார் 50,083 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அன்பளிப்பினை எமது புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மாணிக்கவாசகர் ஆரூரன் அவர்கள் வழங்கியுள்ளார். இவருக்கு எமது சங்கத்தின் சார்பிலும் பயனாளி சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். மேலும் குணரத்தினத்தின் பிள்ளைகளின் எதிர்கால கல்வியை கவனத்தில் கொண்டு எமது மாதாந்த கல்வி உதவித் தொகை கொடுப்பனவு திட்டத்தில்லும் சேர்க்கப்பட்டுள்ளனர். (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)