ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கோத்தாபய இன்றும் ஆஜர்-

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று மீண்டும் ஆஜராகியிருந்தார். பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மூன்று சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் ஆஜராகியிருந்ததாக ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் எஸ்.சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு பயணம், பாதுகாப்புக்கு அளவுக்கு அதிகமான இராணுவத்தினரை இணைத்துக் கொண்டமை மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கான விமான பயணம் போன்றவை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 அளவில் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரான முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் எஸ்.சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். தாக்குதல் தொடர்பில் ஐவர் கைது-

arrest (9)யாழ்ப்பாணத்தில் அண்மையில் சுற்றுலா பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகரில் நேற்றுமாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மானிப்பாய், கல்வியங்காடு, கோப்பாய், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 9 பாரிய குற்றச் செயல்களுடன் சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து வாள், கோடரி, கத்தி உள்ளிட்ட பல கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், அண்மையில் வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டு சந்தேகநபர்களால் திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் தலைமையக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கேபி குறித்த வழக்கு எதிர்வரும் 30ம் திகதிக்கு ஒத்திவைப்பு-

KPபுலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 30ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தபோது, குமரன் பத்மநாதன் தொடர்பில் தற்போது பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, குறித்த மனுவை இம்மாதம் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது-

wsererereகிளிநொச்சி, பூநகிரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தில் ஒரு பகுதியை இராணுவம் அபகரித்து, அவர்களது இராணுவத் தேவைக்காகப் பல வருடங்கள் உபயோகித்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை, குறித்த பகுதியை இராணுவம் பதிவுசெய்யும் முயற்சியில் இறங்கியபோது, அது அப்பிரதேச பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரின் தலையீடு காரணமாக அந்நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 22 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சியே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியா தோணிக்கல் அம்மன் விளையாட்டுக் கழக புது வருட விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)-

7dcde135-060f-4cb9-8e2b-16d036a4b639வவுனியா தோணிக்கல் அம்மன் விளையாட்டுக் கழகத்தின் புதுவருட விளையாட்டு விழா 07.05.2016 சனிக்கிழமை அன்று கழகத்தின் தலைவர் திரு இ.நிசாந்தன் தலைமையில் தோணிக்கல் மேட்டுத்தெரு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கழகத்தின் புது வருட விளையாட்டு விழாவின் காலை நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி திரு வ.சுரேந்திரன் , சிறப்பு அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெ.முரளிதரன், சமூர்த்தி உத்தியோகத்தர் காமினி மல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டதுடன், மாலை நிகழ்வுகளுக்கு சிறப்பு அதிதிகளாக வட மாகாண சபை உறுப்பினர் திரு எம்.பி.நடராஜா, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு எ.சோமரத்ன விஜயமுனி, வவுனியா பிரதேச செயலக நிர்வாக அலுவலர் மு.விஜெயரத்தினம், Read more