ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு விஜயம்-

maiththiripalaபிரித்தானியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று முற்பகல் லண்டன் பயணமாகியுள்ளார். ஜனாதிபதியும் தூதுக்குழுவினரும் இன்று முற்பகல் 10.05க்கு எமிரேட்ஸ் நுமு 651 விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் பயணமாகினர். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்குபற்றும் ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு, நாளை வியாழக்கிழமை லண்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அம்மாநாட்டில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமஷரூன் விடுத்த அழைப்பையேற்றே ஜனாதிபதி இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

வித்தியா படுகொலை சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க மறுப்பு-

jaffna courtsபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இணங்காணப்பட்ட சந்தேகநபர்கள் 09 பேர்களுக்கான பிணை யாழ். மேல் நீதிமன்றத்தினால் இன்று மறுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாணைகள் எதிர்வரும் 10.08.2016 இடம்பெறும் என்றும் அன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கின் சந்தேகநபர்கள் 09 பேரும் இன்று யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு கோரி சட்டமா அதிபரின் சார்பில் அரச தரப்பு சட்டதரணியான சக்தி இஸ்மாயில் மேல் நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். எனினும் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க மறுத்த நீதிபதி, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

10 இலங்கையர் உட்பட 19 பேர் மலேஷியாவில் கைது-

arrestபோலி பாஸ்போட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் சம்பவம் தொடர்பில், 10 இலங்கையர்கள் உட்பட 19 பேர் மலேஷியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். மலேஷிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சந்தேகநபர்களுள் மலேஷிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட ஆறு மலேஷியப் பிரஜைகளும், மூன்று இந்தியர்களும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் பத்துப் பேரில் ஐவரை போலி பாஸ்போட் மூலம் ஸ்விசர்லாந்தின் ஜெனிவா நகருக்கு அனுப்பிவைக்க சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் முற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏனைய ஐந்து இலங்கையர்களும் குறித்த சட்டவிரோத வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் என, செய்திகள் கூறுகின்றன.

சோபித தேரரின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு குழு நியமனம்-

sofitharகோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் முன்னாள் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவர் அடங்கிய குழுவொன்று, கொழும்பு பிரதம நீதவானால் நியமிக்கப்பட்டுள்ளது. சோபித தேரரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விட்டமைக்கான காரணங்களை கண்டறியவே குறித்த குழு, நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜெயசிங்க, இந்தக் குழுவுக்கு தலைமை தாங்குகின்றார். மேலும், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன், வைத்தியர்களான குமுதினி ரணதுங்க, நிமாலி பெர்ணான்டோ மற்றும் இரேஸ் விஜயமான்னே ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக உள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தழிழர்களின் கருத்துக்களை கேட்டறிந்த ஜயம்பதி-

jayampathiஇலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியல் சாசனத்தில் பலரது கருத்துக்களையும் உள்வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் குழுவின் தலைவரும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரட்ண புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ளார். பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான புலம்பெயர் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமிழர்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அவர் கேட்டறிந்து கொண்டார். ஹபோர் காரணமாக அல்லது போருடன் தொடர்புடைய காரணங்களால் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் எம்மவர்கள் என்பதை உணர்ந்துள்ளோம். அரசியல் ரீதியாக தீவிரமாக செயற்பட்டு வரும் அவர்களிடமும் புதிய அரசியல் சாசனம் ஏற்படுத்தப்படுவது தொடர்பில் அவர்களது கருத்துக்களை கேட்பது சரியானது. Read more