வடக்கு மக்கள் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும்
 
Ruvanதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தடைசெய்யப்பட்டிருந்தாலும், வடக்கு மக்கள் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கொடிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை செய்பவர்களுக்கு எதிராக பொலிஸாரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் சென்றது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் பாதுகாப்புப் பிரிவினருடனேயே சென்றதாக தெரியவந்துள்ளது எனவும், பிரச்சினை ஏற்படும் வகையில் அவர் செல்லவில்லை எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

pasil கறுப்புப் பணத்தை பயன்படுத்தி மாத்தறை பகுதியில் காணியொன்றை வாங்கியதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்துள்ளனர்.

அந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாக வாக்குமூலம் அளிப்பதற்காக பசில் ராஜபக்ஷ இன்று காலை நிதி மோசடிகள் பற்றி விசாரணை நடத்தும் விசேட பொலிஸ் பிரிவின் முன்னால் ஆஜரானார். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் பசில் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கடும் நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷவின் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, நிதி மோசடிகளை ஆராயும் விசேட பொலிஸ் பிரிவுக்கு மாதம் ஒருமுறை சமுகமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, அவரது கீழிருந்த திவிநெகும என்ற வறுமை ஒழிப்புத் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகின்றது. இந்தப் பின்னணியிலேயே, காணிக் கொள்வனவு தொடர்பான புதிய குற்றச்சாட்டின் கீழ் அவர் இன்று மீண்டும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரேசிலின் அதிபரான ஜீல்மா ரூஸோஃப் பதவியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தப்படுகின்றார்.

brezilபிரேசிலின் அதிபர் ஜீல்மா ரூஸோஃப் மீதான பதவிநீக்க விசாரணைக்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் செனட்சபை வாக்களித்துள்ளது. அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இரவு முழுவதும் நடந்த விவாதங்களின் தொடர்ச்சியாக இந்த வாக்கெடுப்பு நடந்தது.

அதிபரை பதவி நீக்குவதற்கான விசாரணையை நடத்த வேண்டும் என்று 55 செனட் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அவர் மீது விசாரணை நடத்தப்படக்கூடாது என்று 22 பேர் வாக்களித்தனர்.

இந்த முடிவை அடுத்து, நாட்டின் முதல் பெண் அதிபரான ஜீல்மா, அவரது பதவியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தப்படுகின்றார்.

நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையின் அளவை மறைத்ததாக தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அதிபர் ஜீல்மா உறுதியாக மறுக்கின்றார். இந்தக் குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு அவர் இனி முகம்கொடுக்க வேண்டும்.

கோடிக்கணக்கான பிரேசில் மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுத்தாலும், பின்னர் நாட்டை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய 13- ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக ரூஸோஃப் அகற்றப்படுகின்றார