ஊழல் சொத்துக்களை எங்கிருந்தாலும் மீட்டெடுப்போம் -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

maithree_camronஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை எங்கிருந்தாலும் மீட்டெடுக்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்றுவரும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இவ்வாறு கூறினார்.
நாட்டிலிருந்து சொத்துக்களை திருடிச் சென்றவர்களை கண்டுப்பிடிப்பதற்காக சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான கூட்டு சர்வதேச மையம் ஒன்றை அமைப்பதற்கு மாநாடு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியைடைவதாக தெரிவித்த அவர், ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் கூறினார்.
ஊழலுக்கு எதிரான மாநாட்டில் உரையாற்றுவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரையும் ஜனாதிபதி மைத்திரிபால சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

London1உலகளாவிய ஊழல் ஒழிப்பு மாநாட்டுக்காக லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேசத்துக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாக பிரித்தானிய தமிழர் பேரவை கூறுகின்றது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்இ பொதுமக்களின் காணிகளை விடுவித்தல்இ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் போன்ற வாக்குறுதிகளை இலங்கையின் புதிய அரசாங்கம் அளித்திருந்தாலும்இ அந்த வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றவில்லை என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாளர் வை. சிவரதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இறுதிக்கட்டப் போரின்போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் துணை பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டதாகவும்இ அவ்வேளையில் நடந்த குற்றச்செயல்களுடன் அவருக்கும் பொறுப்பு இருப்பதாகவும் சிவரதன் கூறினார்.
லண்டன் காமன்வெல்த் செயலகத்துக்கு அருகே புதன்கிழமையும் வியாழக்கிழமையும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.