Header image alt text

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு-(படங்கள் இணைப்பு)

P1370765முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றுகாலை 9.00 மணியளவில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களது தலைமையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தில் உயிரிழந்தோர்க்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நினைவு தினத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப் பெரியார்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் பல்கலைகழகத்திலும் அனுஸ்டிக்கபட்டது. யாழ் பல்கலைகழக அனைத்து பீட மாணவர் ஒன்றியம் யாழ் பல்கலைக்கழக தொழிற்சங்கம் மற்றும் ஆசிரிய பீடம் ஆகியவற்றின் எற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பலரும் கலந்துகொண்டு உயிர்நீத்த மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும், மட்டக்களப்பு வாகரை மாணிக்கபுரம் ஆற்றங்கரையோரத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி பிரார்த்தனை இன்று இடம்பெற்றது.
Read more

வித்தியா கொலை வழக்கு, மரபணு அறிக்கை சமர்ப்பிப்பு-

weeweeewபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சாட்சியமாகக் கருதப்பட்ட மரபணுப் (டி.என்.ஏ) பரிசோதனை அறிக்கை, குற்றப்புலனாய்வு பொலிஸாரினால், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கு தொடர்பான ஏனைய விடயங்கள் குறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு உத்தரவிட்ட ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியால், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள 12 பேரில், பத்து பேரது வழக்கு தனியாகவும், ஏனைய இருவரதும் வழக்கு தனியாகவுமே இதுவரை காலமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. எனினும், இன்று இவ்விரு வழக்குகளும் ஒன்றாக்கப்பட்டு, ஒரு வழக்காகவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மிக நீண்டகாலமாக மன்றில் சமர்ப்பிக்கப்படாமல் இருந்த டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை, அப்பரிசோதனைகளை மேற்கொண்ட ஜின்டெக் நிறுவனத்தினால், குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட நிலையில், அவ்வறிக்கை, நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு-

unnamedதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் நினைவேந்தல் நிகழ்வு தொடங்கியது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து ஆலய முன்றிலில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்ட அனைவரும் நினைவு கூரப்பட்டனர். அதன் பின்னர், அமிர்தகழி புனித கப்பலேந்திய மாதா தேவாலயத்தில், ஆலயத்தின் பங்குத்தந்தை அன்னதாஸ் அடிகள் தலைமையில் விசேட வழிபாடு நடைபெற்றது. இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வேண்டுதலும் நடைப்பெற்றது. இந்த நிகழ்வுகளில், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ். வசந்தராஜா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உப குழு உறுப்பினர்கள் மற்றும் பேரவையின் அங்கத்துவக் கட்சிகளின் உறுப்பினர்களும் பெருமளவு பொது மக்களும் கலந்துகொண்டனர்.
Read more

பொதுமக்களிடம் உதவி கோரும் மாவட்ட செயலகங்கள்-

wqewewddஇயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உடனடி அத்தியவசிய பொருட்களை வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பஹா மாவட்ட செயலகம், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதற்காக பொதுமக்களிடம் உலர் உணவு வகைகள், குடிநீர் மற்றும் சுகாதார உதவிகளையும் கோரியுள்ளது. இவ்வாறு உதவிகளை வழங்குவதற்காக 071 352 70 36 மற்றும் 033 222 22 35 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்க முடியும் என்று தெரரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் புத்தளம் மாவட்ட செயலகமும் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 6000 பேர் 50 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் என்.எம்.எச். இந்திரானந்த தெரிவித்தார். அதன்படி புத்தளம் மாவட்ட செயலகத்தில் உதவிப் பொருட்களை ஒப்படைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உதவிகளை வழங்குவதற்காக 032 22 65 225 , 032 22 65 756 , 032 22 65 235 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என்றும் மாவட்ட செயலாளர் கூறியுள்ளார். இதேவேளை கேகாலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக கேகாலை மாவட்ட செயலாளர் பொதுமக்களின் உதவிகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். Read more