தமிழக சட்டசபை தேர்தல் 2016

TamilNadu-assemblyதமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16–ந்தேதி நடைபெற்றது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால், மீதம் உள்ள 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின. 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்தனர்.வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தேர்தல் பார்வையாளர்கள், கட்சி ஏஜெண்டுகள் ஆகியோர் சரிபார்த்த பின்னர் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தமிழகம் முழுவதும் மொத்தம் 68 வாக்கு எண்ணும் மையங்களிலும்
 சென்னை மாவட்டத்தில் 3 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
சென்னையில்  ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ராணிமேரி கல்லூரியில் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி ஆகிய சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

லயோலா கல்லூரியில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. தொடர்ந்து மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

தற்போதைய நிலவர முன்னிலை

அ.தி.மு.க- 96 – வெற்றி -37
தி.மு.க-63 வெற்றி-25
காங்கிரஸ்-6 வெற்றி 2
பாட்டாளி மக்கள் கட்சி- 1
புதிய தமிழகம் -1
இந்தியன் முஸ்லீம் லீக்-1

திருக்கோவிலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி முன்னிலை

 திருவாரூர் தொகுதியில் தி.மு.க தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றார்

 ஆர்.கே நகர் தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெற்றி

 கொளத்தூர் தொகுதியில் தி.மு.க பொருளாளர் மு.க ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.

பாளையங்கோட்டை தொகுதியில்  தி.மு.க வேட்பாளர் மைதீன் கான் வெற்றி

 அ.தி.மு.க வேட்பாளர்கள் செங்கோட்டையன், நடிகர் கருணாஸ், எம்.சி சம்பத் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி முன்னிலை;திருமாவளவன் பின்னடைவு

 சேப்பாக்கம் தொகுதியில் ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார்

 உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் 3-வது இடத்திற்கு சென்றார்

 ஆலந்தூர் தொகுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன் பின்னடைவு

 கடலூர் தொகுதியில் சீமான் பின்னடைவு

 பண்ருட்டி ராமச்சந்திரன்,சீமான்,பின்னடைவு

 மேட்டூர் தொகுதியில் பா.ம.க ஜி.கே மணி முன்னிலை

காட்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி(நத்தம் தொகுதி) முன்னிலை வகிக்கிறார்கள்

 விழுப்புரம் தொகுதியில் சி.வி சண்முகம் முன்னிலை வகிக்கிறார்

 பெண்ணாகரம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி  முதல்-அமைச்சர் வேடபாளர் அன்பு மணி ராமதாஸ் 103 ஓட்டுகளில் பின்னடைவை சந்திக்கிறார்.

ராமநாதபுரம் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி தலைவர்  ஜவஹருல்லா முன்னிலை வகிக்கிறார்.

அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார்.

முன்னாள் அமைச்சர்  எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

அமைச்சர் கோகுல இந்திரா தோல்வி