வவுனியா ஓர்கன் புதுவாழ்வு பூங்கா மாணவர்களுக்கு விசேட உணவு வழங்கல்-(படங்கள் இணைப்பு)-

IMG_6604தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் வவுனியா ஓர்கன் புதுவாழ்வு பூங்கா மாணவர்களுக்கு விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு 23.05.2016 திங்கட்கிழமை கூமாங்குளத்தில் அமைந்துள்ள ஓர்கன் நிறுவனத்தில் நடைபெற்றது. அல்லையூர் சிவா செல்லையா அவர்களின் ஊடாக இவ் விசேட உணவு வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஜெர்மனியில் இருந்து வருகைதந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இணைப்பாளர் திரு ஜெகநாதன், அமெரிக்காவில் இருந்து வருகைதந்த திரு கோபி மோகன், வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் திரு. பார்த்தீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், பொருளாளர் திரு த.நிகேதன் மற்றும் ஓர்கன் புதுவாழ்வு பூங்காவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். இதேவேளை இவ் நிகழ்விற்கு வருகை தந்திருந்த திரு ஜெகநாதன் அவர்களினால் வேறு ஒரு தினத்தில் விசேட உணவு வழங்குவதற்கான நிதியுதவியும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. IMG_6570 IMG_6584 IMG_6592 IMG_6596 IMG_6600 IMG_6604 IMG_6619 IMG_6630 IMG_6648 IMG_6658 IMG_6662 IMG_6664 IMG_6693