லண்டன் பாலேந்திரன் நிதி உதவி மூலம் விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்புக்கு அடிப்படை பொருட்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-
லண்டனைச் சேர்ந்த திரு.பாலேந்திரன் அவர்களின் நிதி உதவி மூலம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்புக்கு தேவையான அடிப்படை பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த திரு.பாலேந்திரன் அவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் இல்ல பிள்ளைகளுக்கு சுமார் 32985 ரூபா பெறுமதியான 15 தலையணைகள் 15 துவாய் 15 பெற்சீட் 15 நுளம்பு வலை 30சிறிய வாளி 2பெரிய வாளி 15தலையணை உறை என்பன வழங்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரம் பிரதேசத்தில் விசேட தேவைக்குரிய மாற்றுவலுவுடைய மற்றும் முற்றிலும் இயங்க முடியாத பிள்ளைகள் என ஆரம்பகட்டமாக 14 பிள்ளைகளுடன் இயங்கி வருகின்றது. இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி இல்ல பிள்ளைகளை பாரமரிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தமக்கான சில அடிப்படை உதவிகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதனை எமது புலம்பெயர் உறவான திரு.பாலேந்திரன் அவர்களின் கவனத்தித்திற்கு கொண்டு சென்றதையிட்டு இன்று அவர்களின் இல்லத்தில் வைத்து வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வாறான பிள்ளைகள் போர் கூழல் காரணமாக சுமார் 185பேர் வரையில் பல இன்னல்களுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற போதும் தம்மால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 14 பிள்ளைகளினையே இப்போது பாரமரிக்க கூடியதாக இருப்பதாக இல்லத்தின் நிர்வாக உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.