வவுனியா உமாமகேசுவரன் முன்பள்ளியின் புதுவருட நிகழ்வும், அலுமாரி அன்பளிப்பும்-(படங்கள் இணைப்பு)-
வவுனியா திருநாவற்குளம் உமாமகேசுவரன் முன்பள்ளி சிறார்களின் புதுவருட நிகழ்வுகள் ஆசிரியர் திருமதி மீரா குணசீலன் தலைமையில் 27.05.2016 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வடமாகாண சபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். சிறப்பு அதிதிகளாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் திரு முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவரும், திருநாவற்குளம் கிராம அபிவிருதிச் சங்கத்தின் பொருளாளருமான திரு சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழக பொருளாளர் திரு த.நிகேதன், உறுப்பினர் பி.கேர்சோன் ஆகியோருடன் தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய ஆசிரியை திருமதி சியாமா, முன்பள்ளி ஆசிரியர் செல்வி சபீதா தர்மலிங்கம், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். மேற்படி முன்பள்ளியின் புதுவருட நிகழ்வானது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) லண்டன் கிளை உறுப்பினர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் அனுசரணையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் அவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட அலுமாரியும் பிரதம அதிதிகளால் முன்பள்ளி ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.