Header image alt text

வவுனியா ஓர்கன் புதுவாழ்வு பூங்கா மாணவர்களுக்கு விசேட உணவு வழங்கல்-(படங்கள் இணைப்பு)-

IMG_6604தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் வவுனியா ஓர்கன் புதுவாழ்வு பூங்கா மாணவர்களுக்கு விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு 23.05.2016 திங்கட்கிழமை கூமாங்குளத்தில் அமைந்துள்ள ஓர்கன் நிறுவனத்தில் நடைபெற்றது. அல்லையூர் சிவா செல்லையா அவர்களின் ஊடாக இவ் விசேட உணவு வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஜெர்மனியில் இருந்து வருகைதந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இணைப்பாளர் திரு ஜெகநாதன், அமெரிக்காவில் இருந்து வருகைதந்த திரு கோபி மோகன், வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் திரு. பார்த்தீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், பொருளாளர் திரு த.நிகேதன் மற்றும் ஓர்கன் புதுவாழ்வு பூங்காவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். இதேவேளை இவ் நிகழ்விற்கு வருகை தந்திருந்த திரு ஜெகநாதன் அவர்களினால் வேறு ஒரு தினத்தில் விசேட உணவு வழங்குவதற்கான நிதியுதவியும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

சப்ரகமுவையில் மாணவர்கள் 12 பேர் பலி, 11 பேரைக் காணவில்லை-

324324சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டத்தில், பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலியானதுடன் 11 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம், சபைத் தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில், நேற்று இடம்பெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில், 63 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. அதில், கேகாலை மாவட்டத்தில் உள்ள 3 பாடசாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அப்பாடசாலைகளை அவ்விடத்திலிருந்து முழுமையாக அகற்றி, வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் தந்தையார் காலமானார்-

sdfdfffffffffநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தந்தையார் சின்னத்துரை சிவஞானம், இன்று புதன்கிழமை காலமானார். மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950களில் வன்னியை நோக்கிய படித்தவாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார். நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளையின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக ஏற்று வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார். மனைவியின் பிரிவிற்கு பின்னும் பிள்ளைகளுடன் வட்டக்கச்சியில் வாழ்ந்த இவர், இறுதி யுத்தத்தின்போது குடும்பத்தினருடன் முள்ளிவாய்க்கால் ஊடாக வெளியேறி ஐரோப்பாவில் சிறிது காலம் வாழ்ந்தார். மீண்டும் தாயகம் திரும்பிய இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 78ஆவது வயதில் காலமாகினார். அன்னாரது இறுதிக் கிரிகைகள் அவரது சொந்த இடமான வட்டக்கச்சியில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அராலி கிணற்றிலிருந்து மாணவனின்சடலம் மீட்பு-

dead.bodyயாழ்ப்பாணம், அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து நேற்றுமாலை, 16 வயது மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இம்முறை கல்வி பொதுத் தராதர சாதரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த, அராலி தெற்கைச் சேர்ந்த ஜெ.ஜெசிந்தன் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இம்மாணவன், கடந்த 23 ஆம் திகதி வீட்டைவிட்டுச் சென்றிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரநாயக்க பகுதிக்கு அமெரிக்க தூதுவர் விஜயம்-

american ambassadorஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் உட்பட ஒரு குழுவினர் இன்று காலை அரநாயக்க பகுதியிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபையின் உறுப்பினரான பய்சல் முஸ்தப்பா மற்றும் பேரிடர் அபாய குறைப்பு தெற்காசிய பிராந்திய ஆலோசகர் டாக்டர் மைக்கல் ஜே அர்னஸ்ட் போன்ற உறுப்பினர்களும் சென்றுள்ளனர். அமெரிக்கா அரயாக்க மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கிய நன்கொடையை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவே இவ்வாறானதொரு விஜயத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

பெல் 206 ரக ஹெலிகொப்டர் விபத்து-

heliஹிங்குராங்கொட விமானப்படை தலைமையகத்தில், விமானப்படை அதிகாரிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெல் 206 ரக ஹெலிகொப்டர், விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்றும், ஹெலிகொப்டருக்கு ஏற்பட்ட சேதங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் விமானப்படை ஊடகப்பேச்சாளர் குஷரூப் கெப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பயிற்சியில் ஈடுபட்ட விமானிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிரான மனு தள்ளுபடி-

fonsekaஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் சரத் பொன்சேகாவை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்த இந்த மனு, பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அல்லாத பொன்சேகாவை தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்தமை சட்டத்துக்கு முரணானது என, இதன்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார். எனவே, அந்த நியமனத்தை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறும் அவர் நீதிமன்றில் கோரினார். இந்நிலையில், பொன்சேகாவின் நியமனம் சட்டத்திற்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது என, தேர்தல்கள் ஆணையகத்தின் சார்பில் ஆஜரான அரசதரப்பு வழக்கறிஞர் வாதாடினார். எனவே இந்த நியமனத்தால் பாராளுமன்ற தேர்தல் சட்டம் மீறப்படவில்லை எனவும், இது குறித்து பிரச்சினை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட யோசனை-

reerrrவட மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட யோசனை இன்று ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அதில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கும் வகையிலான தீர்வுத்திட்ட யோசனையொன்று, கடந்த ஏப்ரல் மாதம் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. குறித்த தீர்வுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில், இன்று, வட மாகாண சபையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, வட மாகாண சபையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட யோசனையானது, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர், இந்த தீர்வுத்திட்ட யோசனையை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர். அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் மாநில சுயாட்சியை அடிப்படையாகக் கொண்டு, அதிகார பகிர்வுகள் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி, வடமாகாண சபையால் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மடிக்கணனி அன்பளிப்பு-

6a5e2e97-d24e-43a4-b424-e2a2b4dd7dfcவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க கல்வி மாதாந்த கொடுப்பனவு திட்டத்தில் உள்ள கிளிநொச்சி ST.THERESA’S GIRLS COLLEGE மாணவி அ.குணாலீசா தனது கல்வி நடவடிக்கைக்காக மடிக்கணனி ஒன்று தந்து உதவுமாறு விடுத்த விண்பத்திற்கு அமைவாக அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த சபாநாதன் யோகானந்தா அவர்களால்

19.05.2016 வியாழக்கிழமை அன்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின்னூடாக அ.குணாலீசாவுக்கு மடிக்கணனி அன்பளிப்பாக வழங்கபட்டது. மாணவியின் கல்வியில் ஆர்வம் கொண்டு மடிக்கணனி அன்பளிப்பாக வழங்கிய சபாநாதன் யோகானந்தா அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மனமாந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)

இலங்கைக்கு துருக்கி அவசர உதவி-

4354545454rrrஇலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை துருக்கி செம்பிறை சங்கம் (Turkish Red Crescent) ) வழங்கியுள்ளது. இதன்படி, கூடாரங்கள், பிளங்கட் மற்றும் சோலார் கிட் போன்ற பொருட்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, துருக்கியின் மனிதாபிமான அமைப்பான செம்பிறை சங்கத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துருக்கியின் இந்த உதவிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நன்றி தெரிவித்துள்ளதோடு, சுனாமியின் பின்னர் துருக்கி செம்பிறை சங்கத்தால் இலங்கையில் 250 வீடுகள் அமைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். இலங்கை இதனை ஒருபோதும் மறக்காது எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையின் துயரங்களில் துருக்கி பங்குகொள்ளும் என குறிப்பிட்ட இலங்கைக்கான துருக்கித் தூதுவர், முடிந்தளவு விரைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பசில் ராஜபக்சவின் செயலாளர் கைது, லலித் வீரதுங்க ஆஜர்-

arrest (30)முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளர் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கம்பஹா ஒருதொட்ட காணிக்கு, அரசாங்கத்தின் நிதியை முறைக்கேடான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர், விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே அவர், கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளரான லலித் வீரதுங்க, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவுக்கு சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, வாக்குமூலமளிக்க அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மூன்று அமைச்சுகள் வடக்கு முதல்வர் வசமாகின-

vigneswaranவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தான் வகிக்கும் அமைச்சுகளுக்கு மேலதிகமாக, இன்னும் 3 அமைச்சுகளைத் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார். அந்த மூன்று அமைச்சுகளுக்கான பொறுப்புக்களையும், நேற்று மாலை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வட மாகாண அமைச்சர் வைத்திய கலாநிதி பத்தமநாதன் சத்தியலிங்கத்திடமிருந்த, சமூகசேவைகள், புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய மூன்று அமைச்சுக்களே முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. வட மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பில் அண்மைய காலங்களில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் வெளியாகி வந்த நிலையில், எந்தவோர் அமைச்சரும் மாற்றப்படாமல், ஏற்கனவே தன்னிடம் இருந்து சுகாதார அமைச்சருக்கு வழங்கிய மூன்று அமைச்சுக்களையே, முதலமைச்சர், நேற்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சர் நிதியம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டே இந்த அமைச்சுகளை மீளப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு-(படங்கள் இணைப்பு)  

Video plote vavuniya 

20160522_104604ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு நேற்று (22.05.2016) ஞாயிற்றுக்கிழமை வவுனியா உமாமகேஸ்வரன் வீதிச் சந்தியில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் முற்பகல் 9.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக கட்சியின் ஸ்தாபகர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து மகாநாட்டு மண்டபத்தில் சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. கட்சியின் தலைவர், செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், வெளிநாட்டுக் கிளைகளின் பிரதிநிதிகள் மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் சுடரேற்றிவைத்து மகாநாட்டை ஆரம்பித்து வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், மகாநாட்டு ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அவரது உரையினைத் தொடர்ந்து கட்சியின் லண்டன் கிளை சார்பில் கலந்து கொண்டிருந்த லண்டன் ஈஸ்ட்ஹாம் உபநகரபிதா போல் சத்தியநேசன், கட்சியின் பிரான்ஸ் கிளை சார்பில் கலந்துகொண்டிருந்த ஜென்னி ஜெயச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள். தொடர்ந்து வடக்கு மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் க.சிவநேசன் ஆகியோர் உரையாற்றினார்கள். தொடர்ந்து கட்சியின் செயலாளர் சு.சதானந்தம் அவர்களால் கட்சியின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. Read more

இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கோரி புளொட் மாநாடு
 
plot mnaadu 01இலங்கையில் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதுடன், இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணும் நோக்கிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கிலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி புளொட் அமைப்பு மாநாடு ஒன்றை ஞாயிறு அன்று வவுனியாவில் நடத்தியுள்ளது.

மூன்று வருடங்களுக்கு பின்னர் அந்த அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தன் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. Read more

இலங்கை மழை வெள்ளம், நிலச்சரிவு: 92 ஆக அதிகரித்த உயிரிழப்பு

malayagam01இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.
மழை வெள்ளம் தற்போது குறைந்து வருவதால் கணிசமான குடும்பங்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இடர் முகாமைத்துவ அமைச்சகத்தினால் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 86 ஆயிரமாக குறைந்துள்ளது. Read more

விவசாயக் கடன் தள்ளுபடி, 500 மதுபானக் கடைகள் மூடல்: ஜெயலலிதா உத்தரவுகள்
 
jayalalithaஇன்று தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, விவசாயக் கடன் தள்ளுபடி, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட ஐந்து முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, பதவியேற்பு விழா முடிந்த பிறகு தலைமைச் செயலகத்திற்குச் சென்று ஐந்து முக்கியத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். Read more

பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினுக்குப் பின் வரிசையில் இடம் குறித்து சர்ச்சை

stalin_dmkசென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பின்வரிசையில் அமரவைக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர் பாபு, பொன்முடி, வேலு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர்.
இவர்கள், 10 வரிசைக்கு அப்பால் அமரவைக்கப்பட்டது தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. Read more

நிலச்சரிவு, வெள்ளம்: உதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் இலங்கை
 
srilanka_flood_afp_இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

நாடு தழுவிய அளவில் ஒரு இலட்சத்து 5 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 28 ஆயிரம் பேர் வரையில் இந்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தகவல்கள் வெளியிட்டுள்ளது.

65 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 3 இலட்சத்து 20 ஆயிரம் பேர் தங்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேறி 600 நலன்புரி மையங்கள் உட்பட தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) எட்டாவது தேசிய மாநாடு-

dplf logo smallஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) எட்டாவது தேசிய மாநாடு எதிர்வரும் 22ம் நாள் வவுனியாவில் இடம்பெறும்.

வவுனியா கோவில்குளம் உமாமகேஸ்வரன் சந்தியில் அமைந்துள்ள “ஆதி” திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ள இவ் மாநாட்டில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், அங்கத்தவர்கள் அனைவரும் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து கலந்துகொள்ளவுள்ளதோடு, அமைப்பின் சர்வதேச கிளைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் தற்கால அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் மாநாட்டினை நடாத்தி முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்),
வவுனியா மாவட்ட இணைப்பாளர்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)
2016.05.16