அரசியலமைப்பை மாற்றுவதே எதிர்பார்ப்பு-சபாநாயகர்-

karu jeyasuriyaநாடாளுமன்றத்தில் சகலரின் ஆதரவு மற்றும் இணக்கப்பாட்டுடன், நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பை முன்வைப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் இறுதியறிக்கை, அக்குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தலைமையிலான குழுவினால், நாடாளுமன்றில் உள்ள சபாநாயகரின் காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. அதன்பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே சபாநாயகர், இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், யதார்த்தத்துக்கு உகந்த வகையில், அரசியலமைப்பை மாற்றவேண்டும் என்பதே நாட்டு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும். அப்படியில்லாவிடின், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாகும். அது மக்களின் உரிமைகளை பாதுகாப்பவையாக இருத்தல்வேண்டும். நாடாளுமன்றத்தின் அதிகாரம், அரசியலமைப்பை மாற்றுவதற்காகும். எனவே, நான் விசேடமாக உறுதியளிக்கின்றேன். சகலருடைய கருத்துகளைப் பெற்றுக்கொண்டு, நாட்டுக்கு உகந்த அரசியலமைப்பை கட்டாயமாக முன்வைக்;கமுடியும் என குறிப்பிட்டார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கான தடை நீக்கம்-

passportமோதல் மற்றும் அரசியல் காரணங்கள் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கடவுச் சீட்டு விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட குறித்த தடையை நீக்குவதற்கான சுற்றரிக்கை நேற்று வெளியிடப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து அகதி அந்தஸ்து பெற்றுள்ள மற்றும் அகதி அந்தஸ்து பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளிநாட்டு கடவுச் சீட்டு விநியோகிக்க வேண்டாம் என வெளிநாடுகளிலிருந்த இலங்கை தூதுவராலயஙகளுக்கு 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணிப்புரை விடுக்கப்பட்டது. இந்த சுற்றறிக்கை காரணமாக குடியுரிமை பாரிய அளவில் மீறப்பட்டுள்ளதாகவும், அரசியல் காரணங்களுக்காக வெளிநாடுகளில் தஞ்சமடைந்வர்கள் குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் அனுமதிப் பத்திரமின்றி பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டு மக்களிடையே காணப்படும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளை நீக்கி அனைவரும் சுதந்திரமாக சுற்றுலா செல்வது உள்ளிட்ட பல காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த பகீரதி விடுதலை-

bakeerathiகடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று, பிரான்ஸிலிருந்து இலங்கை வந்தபோது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டவரும் புலிகள் இயக்கத்தின் கடற்புலி பிரிவுத் தலைவியென குற்றஞ்சாட்டப்பட்டவருமான பகீரதி முருகேசு என்பவர், சட்டமா அதிபரின் பரிந்துரையின் பேரில், அவருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், நீதிமன்றத்தின் பொறுப்புக்கு எடுக்கப்பட்ட பகீரதியின் கடவுச்சீட்டையும், அவரிடமே வழங்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, நேற்று நீதிமன்ற பதிவாளருக்குப் பணிப்புரை விடுத்தார். 1991ஆம் ஆண்டில், புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்ற பகீரதி, 1996இல் கடற்புலிகளின் பெண்புலிகள் பிரிவின் தலைவியாக நியமிக்கப்ட்டாரென, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். சுப்பிரமணியம் ஜெயநேசன் என்பவரைத் திருமணம் செய்த இவர், 2005இல், தனது கணவனுடன் பிரான்ஸ{க்குச் சென்றார். இவர் சார்பில், சட்டத்தரணிகளான கே.வி.தவராசா, நளினி இளங்கோவன் மற்றும் சுபராஜா துஷ்யந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இரு கல்லூரிகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்-

asddsdபாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்பட்ட யாழ் காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரி மற்றும் காங்கேசன்துறை கனிஷ்ட வித்தியாலம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் பூர்வீக இடங்களில் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 26 வருடங்களின் பின் இந்த இரு பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று பூர்வீக இடத்தில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராநா தலைமையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப விழாவில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். யுத்தத்தின் பின் பாதுகாப்பு பிரிவினர் நிலைகொண்டிருந்த குறித்த இரு பாடசாலைகளும் கடந்த மார்ச் 12ஆம் திகதி விடுவிக்கப்பட்டன. காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரி மற்றும் காங்கேசன்துறை கனிஷ்ட் வித்தியாலயம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 26 வருடங்களாக தௌ;ளிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அருகில் தனியார் காணியில் நடத்தப்பட்டன. காங்கேசன்துறை, மாவிட்டபுரம், தெல்லிப்பழை, மயிலிட்டி, தையிட்டி, ஊரணி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த இரு பாடசாலைகளிலும் கல்வி பயில்கின்றனர். மேலும் யுத்ததால் இடம்பெயர்ந்து சபாபதிபிள்ளை முகாம் மற்றும் கண்ணகிபுரம் முகாமில் தங்கியுள்ள மாணவர்களும் இந்த இரண்டு பாடசாலைகளிலும் கல்வி பயில்கின்றனர்.

பொலிஸ்மா அதிபர் அமெரிக்காவுக்கு விஜயம்-

pujitha jayasundaraபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு பொலிஸ்மா அதிபர் அமெரிக்காவின் நியுயோர்க் நகரம் நோக்கி சென்றதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொலிஸ் மா அதிபர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். மோசசடி நிகழ்வுகள், சர்வதேச குற்றங்கள் மற்றும் உலக குற்ற விசாரணை சம்பந்தமாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இதற்கிடையில் பூஜித் ஜயசுந்தர மீளவும் நாடு திரும்பும் வரையில் பதில் பொலிஸ் மா அதிபராக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 09ம் திகதி இந்த நியமனம் செல்லுபடியாகும் என்று பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விசேட இணக்க சபை-

sri lankaயுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களின் காணி, வீடு மற்றும் உடைமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக விசேட இணக்க சபையை நியமிக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் நீதி அமைச்சின் இணக்க சபை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இணக்க சபையின் உறுப்பினர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வட மாகாண மக்கள் இழந்த தமது பூர்வீக காணிகள், வீடுகளின் மற்றும் உடைமைகளின் சட்டரீதியான உரிமையாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையான உரிமையாளர்களிடம் அவர்களின் உடைமைகளை ஒப்படைப்பதற்கு அரசாங்கம் விசேட விதிமுறைகள் சட்டத்தையும் அண்மையில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வட மாகாணத்தில் வாழ்ந்து வரும் மக்களின் காணியுரிமையை உறுதிசெய்வதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை தாக்கி 6வயது சிறுமி மரணம்-

sfddகாட்டு யானை தாக்கியதில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 6 வயது சிறுமி பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இராசையா ரோஜினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சிறுமியின் தந்தை படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 9.00 மணியளவில் வவுணதீவு கற்பகக்கேணி கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. பலியான சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வவுணதீவு பொலிசார் விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

30 குடும்பங்களை சேர்ந்த 142 பேரை இடம்பெயர கோரிக்கை-

landslide_5பொகவந்தலாவ லோய்னோன் தோட்ட பகுதியில் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளமையால் 30 குடும்பங்களை சேர்ந்த 142 பேரை இடம்பெயருமாறு வலியுறுத்தி உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை தோட்ட நிர்வாகத்தால் இந்த அறிவுறுத்தல் வழங்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 2014ம் வருடம் டிசம்பர் மாதம் 31ம் திகதி ஏற்பட்ட மண்சரிவின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் மகளும் பலியானதை அடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனையின் போது குறித்த தோட்ட மக்களை வெளியேறுமாறு முன்கூட்டிய அறிவித்துள்ள போதிலும் இந்த அறிவித்தலை தோட்ட நிர்வாகம் மக்களுக்கு அறிவிக்கவில்லையென அம் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனவே லோய்னோன் தோட்ட மக்களின் குடியிருப்புக்களில் பாரிய வெடிப்புகள் காணப்படுவததோடு குடியிருப்புகளுக்கு அருகாமையில் மண்மேடு சரிந்து விழும் அபாயத்தில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொகவந்தலாவ லோய்னோன் தோட்டமக்கள் தற்பொழுது வாழ்ந்து வரும் பகுதி பாதுகாப்பு அற்ற பகுதியாக காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வழங்கபட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மக்களுக்கு பொருத்தமான இடம் ஒன்றை தெரிவுசெய்து பொகவந்தலாவ லொய்னோன் வீடுகளை அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொகவந்தலாவ லோய்னோன் தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.