காணாமற்போனோர் அலுவலகத்திற்கு உதவ அமெரிக்கா முன்வருகை-

americaஇறுதிக்கட்டப் போரில் காணாமல்போனோர் தொடர்பில் அமைக்கப்படவுள்ள அலுவலகத்திற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கவுள்ளது இதன்படி அமெரிக்கா இந்த அலுவலகம் தொடர்பில் தகவல்களை பரிமாறிக்கொள்ளவுள்ளது. அமெரிக்க பிரஜைகள் மற்றும் அந்நாட்டின் சட்டரீதியான வதிவிடவாளர்களின் நலன் கருதி, அமெரிக்காவின் ஒத்துழைப்பு இந்த அலுவலகத்துக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் ஜெனீவாவில் இலங்கையுடன் இணைந்து யோசனையை முன்வைத்த தரப்பு என்ற அடிப்படையிலும் இந்த உதவி வழங்கப்படுவதாக அத்தூதரகம் குறிப்பிட்டுள்ளது. பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தின் குறித்த அலுவலக யோசனைக்கு ஆதரவை வெளியிட்டுள்ளது. எனினும் இந்தியா, அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளின் கருத்துக்கள் இன்னும் வெளியாகவில்லை. இதேவேளை இந்த அலுவலகம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, போரின்போது காணாமல் போனதாக கூறப்படும் பலர் வெளிநாடுகளில் வேறு பெயர்களில் வசிப்பதாக கூறியுள்ளார்.

25,000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை-

passportவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 25 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நவீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், மஹிந்த ஆட்சிக் காலத்தில் அவர்களின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டது. எமது அரசாங்கம் இதில் மாற்றத்தை செய்துள்ளது. அரசியல் கட்சி, நிறம், இனம், மதம், ஜாதி பேதம் பாராது இரட்டைக் குடியுரிமை வழங்கவுள்ளது. இதுவரையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மாதம் குறைந்தது இரண்டாயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவுள்ளோம். இதனடிப்படையில் இந்த ஆண்டுக்குள் 25 ஆயிரம் வெளிநாட்டவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்க அனுமதி-

landslide_5மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள கேகாலை மாவட்ட மக்களுக்கு காணிகள் மற்றும் வீடுகள் வழங்கும் திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இறுதி அனுமதி கிடைத்துள்ளது. அனர்த்தங்களை எதிர்கொண்ட கேகாலை மாவட்ட மக்களை மீள்குடியேற்றம் செய்வது சம்பந்தமாக இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு அனுமதி வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. மீள்குடியேற்றம் செய்வதற்கு தகுதியான இடம் மற்றும் தேவையான அளவுகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அரச மற்றும் தனியார் பெருந்தோட்ட காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெருந்தோட்ட தொழிலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத விதமாக மற்றும் குடியேற்றத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க கூடிய விதமான காணிகளை சுவீகரிக்குமாறு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

தலைசிறந்த உலக குத்துச் சண்டை வீரர் மொஹமட் அலி காலமானார்-

xasdsadsபிரபல உலக குத்துச் சண்டை வீரரும் முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74 வது வயதில் காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக அவர் கடந்த வியாழக்கிழவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1964ம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்த பின் தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிகொண்டார். 1942ம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி பிறந்த தி கிரேடேஸ்ட் தி லூயிவிள்ளே லிப் என்ற பல்வேறு பட்டப் பெயர்களாலும் அழைக்கப்பட்டார். இவர் கலந்து கொண்ட 61 குத்துச் சண்டை போட்டிகளில் 56 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 05 போட்டிகளிலேயே தோல்வியடைந்துள்ளார்.

பெண் சட்டத்தரணிக்கு ஏற்பட்ட அபகீர்த்தி தொடர்பில் கண்டனம்-

saasassகிளிநொச்சியில் உள்ள பெண் சட்டத்தரணி ஒருவருக்;கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் உயர்பதவியில் இருக்கும் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீரத்தியை ஏற்படுத்தும் வகையில் அவரது கணவர் தொடர்பாகவும் அவரது குடும்பத்துக்கு அவப்பெயரை உருவாக்கவும் நீதிமன்றை அவமதிக்கும் வகையிலும் வெளியான செய்தி தொடர்பாக கடும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். குறித்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. இது திட்டமிட்டு மேற்;கொள்ளப்பட்ட ஓர் விடயம் என கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.5 பில்லியன் நிதியுதவி-

int fund monitaryஇலங்கைக்கு 1. 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவி சர்வதேச நாணய நிதியத்தின் 3 வருட விரிவாக்கப்பட்ட நிதிவசதியளிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இது தவிர, இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன் உதவியாக 650 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையையும் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.