ஐதேகவுடன் இணைந்தே போட்டி-அமைச்சர் சரத் பொன்சேகா-

sarathஎதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டமைப்பாக போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக, ஜனநாயகக் கட்சியின் தலைவர், அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதும் தமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியாகவே செயற்படுவதாக அவர் கூறியுள்ளார். இன்று காலை கண்டியில் வைத்தே சரத் பென்சேகா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் இலங்கை மக்களுக்கு மீண்டும் உதவி-

bangladeshவெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பங்களாதேஷில் இருந்து வந்துள்ள குறித்த கப்பல் இன்று பகல் கொழும்பை அடைந்ததாக தெரியவந்துள்ளது. இதேவேளை, பங்களாதேஷ் முன்னதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானம் மூலம் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.