யாழ். ஸ்கந்தவரோதய கல்லூரியும், ஸ்கந்தவரோதய ஆரம்பப்பாடசாலையும் இணைந்து நடாத்திய மாபெரும் இலவச மருத்துவமுகாம்-(படங்கள் இணைப்பு)

P1380201கொழும்பு பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். ஸ்கந்தவரோதய கல்லூரியும், ஸ்கந்தவரோதய ஆரம்பப்பாடசாலையும் இணைந்து நடாத்திய மாபெரும் இலவச மருத்துவமுகாம்-2016 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்கந்தவரோதயக் கல்லூரி வளாகத்தில் முற்பகல் 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான “ஸ்கந்தவரோதயன்” கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வரையறுக்கப்பட்ட அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபன பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. பி.சுந்தரலிங்கம், யாழ். பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி கே.நந்தக்குமார், யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி ரி.சத்தியமூர்த்தி, உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. சு.சண்முககுலகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடக்கவுரையினை ஸ்கந்தவரோதய கல்லூரியின் அதிபர் “ஸ்கந்தவரோதயன்” திரு. மு.செல்வஸ்தான் அவர்கள் ஆற்றியதைத் தொடர்ந்து வரவேற்புரையினை ஸ்கந்தவரோதய ஆரம்பப்பாடசாலையின் அதிபர் திரு. வ.நந்தீஸ்வரன் அவர்கள் ஆற்றினார். தலைமையுரையினை குழந்தை வைத்திய நிபுணர் “ஸ்கந்தவரோதயன்” வைத்தியக்கலாநிதி க.சிவகுமார் அவர்கள் ஆற்றினார். சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியக்கலாநிதி “ஸ்கந்தவரோதயன்” பி.ஆதவன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

P1380148 P1380151 P1380153 P1380161 P1380169 P1380170 P1380171 P1380172 P1380173 P1380175 P1380176 P1380178 P1380183 P1380184 P1380188 P1380191 P1380194 P1380201 P1380203