கோட்டைக்காடு அரசினர் வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு-(படங்கள் இணைப்பு)-

jaffna01தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற செயல்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் யாழ். வட்டுக்கோட்டை கோட்டைக்காடு அரசினர் வைத்தியசாலைக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜேர்மன் கிளையினால் அனுப்பிவைக்கப்பட்ட அன்பளிப்புப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. இதன்படி படுக்கை வசதிகளும், வைத்திய உபகரணங்களும் மேற்படி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு மேற்படி பொருட்களை வைத்தியசாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சி ஐங்கரன், மற்றும் பிரதேச வைத்திய அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

jaffna02jaffna01