ஜெயலலிதா – நிர்மலா சீதாராமன் சந்திப்பு இலங்கைத் தமிழர் பிரச்சனை தீர்க்க வலியுறுத்தல்

jaya_nirmala_seetharamanமத்திய – மாநில அரசுகளுக்கிடையில் முக்கியப் பிரச்சினையாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரியைப் பொருத்தவரை, தமிழகத்தின் நிதி சுதந்திரத்தை பாதிக்கும் என்று கூறியுள்ளார். தமிழகத்தின் பல யோசனைகள் ஏற்கப்பட்டாலும், இன்னும் பல அம்சங்கள் தமிழகத்தைப் பாதிக்கும் என முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்து, ஆற்றங்கரையோரத்தில் உள்ள மக்களுக்காக புதிதாக 50 ஆயிரம் வீடுகளும், ஏற்கெனவே உள்ள 50 ஆயிரம் வீடுகளைப் புதுப்பிக்கவும் சிறப்பு நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இலங்கைப் பிரச்சினையைப் பொருத்தவரை, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் ஜனநாயக உரிமைகளைப் பெறும் அதிகாரப்பரவலை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழ் ஈழம் என்ற இலங்கைத் தமிழர்களின் இறுதி இலக்கை அடையும் முயற்சியாக, ஜனநாயக அதிகாரத்தைப் பெறுவதற்கு இந்திய அரசு தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை தண்டிக்க சர்வதேச அரங்கில் இந்தியா தீவிரமாக செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் முகாம்களிலும் வெளியிலும் உள்ள இலங்கை அகதிகள், வேலைவாய்ப்புப் பெறுவதற்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஏதுவாக, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

பின்னர் தமிழ்நாடு இல்லத்தில், மத்திய இணை அமைச்சர்கள், பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் முதல்வரைச் சந்தித்துப் பேசினார்கள்.