வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மருத்துவ உதவி நிதி மற்றும் உணவு பொருட்கள் அன்பளிப்பு (படங்கள் இணைப்பு)-

31fbe5f2-29b7-49d9-afe2-9c4582b2ff73யாழ். பொன்னாலை மேற்கு சுழிபுரம் கிராமத்தை சேர்ந்த பராசக்தி என்பவரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து இன்று எமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்நத பரஞ்சோதி லோகஞானம் அவர்களின் நிதி அனுசரனையுடன் மாதம் ஓன்றுக்கு தேவையான ரூபா 9640 பெறுமதியான உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ செலவுக்காக ரூபா 5000 அவரது இல்லத்தில் வைத்து வழங்கபட்டன. பராசக்தி எம்மிடம் மேலும் தெரிவித்ததாவது, தனது கணவர் ஒரு கூலி தொழிலாளி தாமும் புற்று நோயால் பாதிக்கபட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது 3 பிள்ளைகளும் பிறப்பில் இருந்தே நடக்க முடியாதவர்கள்(ஊனமுற்றவர்கள்) இவர்களுக்கு ஊனமுற்றோருக்கான நிதி பிரதேச செயலகத்தினால் இவர்களின் 3 பிள்ளைகளில் ஒருவருக்கு மாத்திரமே 3000 ரூபா வழங்கபட்டு வருகின்றது. இதனால் தாம் மிகுந்த துயரத்தடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இத்தருனத்தில் பலதரப்பட்ட பாதிக்கபட்ட மக்களுக்கு தானே முன்வந்து பல அறக்கருமங்களை ஆற்றிவரும் கருணை உள்ளம் கொண்ட பரஞ்சோதி லோகஞானம் அவர்கள் நோய் நொடி ஒன்றும் அனுகாவண்ணம் நீண்ட ஆயுள்ளுடனும் குறைவில்லா செல்வசெழிப்புடனும் வாழ்ந்து நற் பணிகள் செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு துணை நிற்க வேண்டி பாதிக்கபட்ட மக்கள் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இறைவனை பிராத்திக்கும் இத் தருணத்தில் எம்மோடு இணைந்து பல அறக்கருமங்களை முன் உதாரணமாக செய்துவரும் அனைவருக்கும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவத்துக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).

வழங்கபட்ட பொருட்களின் விபரம்

அரிசி 25முப
கோதுமை மா 10முப
சீனி 2முப
சோயா 1முப
ரின் மீன் 5
பால்மா 3
தேயிலை 1ஃ2மப
கடலை 3முப
பயறு 3முப
ஆட்டா மா 2
குரக்கன் மா 2
பிஸ்கட் பெட்டி 1
அப்பளம் 10
மரக்கறி எண்ணை 3ட
உழுத்தம் பருப்பு 1மப
ரவை 2மப
மஞ்சள் பருப்பு 3மப
277e72d2-d0e7-446a-9e4f-ffe4be4a548c
755dd33c-1d38-48ff-bbd2-87f3fa9aef85