வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு உதவி-(படங்கள் இணைப்பு)
வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் 2016ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டிலிருந்து கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளிற்கு ஒவ்வொருவருக்கும் 30 ஆயிரம் ரூபா பெறுமதியான நல்லின ஆடுகளும், 10 பயனாளிகளிற்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான உள்ளுர்க் கோழிகளும் 10ஆயிரம் ரூபா பெறுமதியான கோழிக்கூடுகளும் முல்லைத்தீவு அரச கால் நடை அலுவலகத்தினூடாக நேற்று வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்விலே வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. க.சிவநேசன் அவர்களுடன், முல்லைத்தீவு அரச கால்நடை வைத்திய அதிகாரி திருமதி நிவேதினி மற்றும் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வன்னி மேம்ம்பாட்டுப் பேரவைத் தலைவர் க.தவராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.