கடனாவில் தற்கொலைக்கு அனுமதி வழங்கும் புதிய சட்டம்-

dsfdfdfகனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயில் தத்தளிக்கிறவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி குணப்படுத்த முடியாத நோயில் தத்தளிக்கிறவர்கள், உயிரைப் போக்கிக்கொள்ள வைத்தியர்கள் உதவ விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் அகற்றியது. இதை தொடர்ந்து அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணப்படுக்கையில் அவஸ்தைப்படும் நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதியளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்துக்கு அந்நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் இந்த புதிய சட்டம் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதாக விமர்சனமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘இந்த சட்டம் முதல் கட்ட நடவடிக்கைதான். எதிர்காலத்தில் இது விரிவுபடுத்தப்படும்’ என கூறியுள்ளனர். இதுபோல் நோயாளிகள், மருத்துவர்கள் உதவியுடன் மரணத்தை தாமே தேடிக்கொள்ள அனுமதியளிக்கும் சட்டம் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, அல்பேனியா, கொலம்பியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளது. தற்போது அந்நாடுகளின் வரிசையில் கனடாவும் சேர்ந்துள்ளது.

வலி வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து 25வருட நினைவுநாள்-

sdfdfdfdfயாழ்ப்பாணம் வலி வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து 25வருட நினைவுநாள் யாழ். தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய வளாகத்தில் நினைவுகூரப்பட்டது.

துர்க்கையம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளுடன் மேற்படி நாள் நினைவுகூரப்பட்டது.

இதில் இடம்பெயர்ந்த மக்கள், ஆலய நிர்வாகத்தினருடன், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

பிரதமர் வேட்பாளராக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி விருப்பம்-

mahindaaஎதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தமக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்திருக்கும் அவர் “ஜப்பான் டைம்ஸ்” இற்கு வழங்கிய செவ்வியிலே இதனைத் தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட்டபோது தடையேற்பட்டது என தெரிவித்த அவர், மீண்டும் தான் பிரதமராக போட்டியிட எதுவித தடையும் இல்லை எனவும் குறிப்பிட்டார். மேலும், அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஓய்வு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, தான் 18 மில்லியன் டொலரை களவெடுத்ததாக தற்போதைய அரசாங்கம் குற்றஞ்சாட்டிள்ளது. அது நிரூபிக்கப்பட்டால் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொள்வதாகவுட’ அவர் குறிப்பிட்டுள்ளதுடன், புலிகள் மீளிணைவதை தடுப்பது தனது இலக்கு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்கொரிய அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருகை-

south koreaதென்கொரியாவின் வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட 25 பேர் அடங்கிய குழுவினர் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளனர். மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்த குழு நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார். கைத்தொழில், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் இவர்கள் முதலீடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த முதலீட்டாளர்களுடன் இரண்டு நாட்கள் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலூடாக நாட்டிற்கு பாரிய அளவிலான நிதியை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் உலருணவு பொதிகள் அன்பளிப்பு-

b24a3156-d3d9-4f41-8b6a-ec4c58126293எமது புலம்பெயர் உறவான லண்டன் நாட்டை சேர்ந்த திரு.பரஞ்சோதி லோகஞானம் அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கபட்டு இரு கண்களையும் இழந்த வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள 20பேருக்கு தலா 2000ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கின் ஊடாக வழங்கயுள்ளார். மேற்படி விண்ணப்பம் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக 40000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் பரந்தனில் உள்ள வன்னி விழிப்புலன்ற்றோர் சங்க அலுவலகத்தில் வைத்து இரு கண்களும் பார்வையிழந்த 20 பயனாளிகளுக்கு வழங்கபட்டன. இத் தரும செயலினை செய்ய தானாகவே முன்வந்த புலம்பெயர் உறவான திரு.பரஞ்சோதி லோகஞானம் அவர்களுக்கு விழிப்புலனற்றோர் சங்கத்தின் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சார்பாகவும் மன மார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)