சங்கானை வண்ணத்துப்பூச்சி சர்வதேச பாடசாலையின் விளையாட்டு நிகழ்வு2016-(படங்கள் இணைப்பு)
யாழ். சங்கானை வண்ணத்துப்பூச்சி சர்வதேச பாடசாலையின் 2016ஆம் ஆண்டிற்கான விளையாட்டு நிகழ்வு சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று (19.06.2016) பிற்பகல் 2மணியவில் பாடசாலையின் பணிப்பாளர் திரு. ரி.முகுந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திருமதி எம்.ரஞ்சன் (வலிகாமம் கோட்டக் கல்வி வலய கணக்காளர்) திரு. ராமசாமி சிறிதரன் (சிவப்பிரகாச மகா வித்தியாலய அதிபர்) ஆகியோரும், திரு. கே.சுதாகரன்( சைவப்பிரகாச மகாவித்தியாலய அதிபர்), மற்றும் கே.ஜெகநாதன் (முன்னாள் அதிபர்), நாலந்த ஜயவீர(மானிப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி), திரு. கே.குணசிறி(நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் கௌரவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து தேவாரம், கிறிஸ்தவ கீதம், தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பாண்ட் வாத்தியம், விளையாட்டு நிகழ்வுகள் என்பன நடைபெற்று இறுதியாக பரிசில்களும் வழங்கப்பட்டன.