செங்கலடி வேப்பவெட்டவானில் பால் சேகரிப்பு நிலையம் திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)-

vbvbvvvமட்டக்களப்பு கொம்மாதுறை கால்நடை அபிவிருத்தி பால் சேகரிப்பு, கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் செங்கலடி வேப்பவெட்டவானில் பால் சேகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வானது UNDP திட்டமிடல் அதிகார சபையின் அனுசரணையுடன் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் திரு. கே.சிவநாதன் (கிழக்கு மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி, விவசாய, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர்), திரு. ப.யோகநாதன் (கால்நடை அபிவிருத்தி பால் சேகரிப்பு, கால்நடை வளர்ப்போர் சங்கம்),

திரு. எஸ்.கிருபை ராஜசிங்கம் (கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், மட்டக்களப்பு), திரு. கே.பார்த்தீபன் (UNDP திட்டமிடல் நிபுணர் மட்டக்களப்பு) மற்றும் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
cvbvbvb
bvbv vbvbvcbvb