காணியை ஒப்படைக்கக் கோரி குடும்பமொன்று கவனயீர்ப்புப் போராட்டம்-

dfdfdfதமது காணியை முழுமையாக தமக்கு வழங்குமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இன்றுகாலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமது தந்தையால் வெட்டப்பட்ட 140 பேர்ச்சஸ் காணியை முழுமையாக வழங்குமாறு தெரிவித்து முத்தையா விஜயநாதன் என்பவர் இன்று காலை போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். இந்தப் போராட்டத்தில் அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் பங்கேற்றிருந்தனர். காணியை முழுமையாக ஒப்படைக்க கரைச்சி பிரதேச செயலாளர் மறுத்து வருவதாகவும் ஒருதலைப்பட்சமாக அவர் செயற்படுவதாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அனுர சேனாநாயக்க, சுமித் பெரேராவுக்கு பிணை மறுப்பு-

courtsமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரது பிணை கோரிக்கைகள் கொழும்பு மேலதிக நீதவானால் மறுக்கப்பட்டுள்ளது. றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, இவர்கள் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி எதிர்வரும் 7ம் திகதி வரை சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து இன்று நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய சுங்க சட்டத்திற்கு மக்களும் யோசனை முன்வைக்க சந்தர்ப்பம்-

customsபுதிய சுங்க சட்டத் தயாரிப்பு தொடர்பிலான யோசனைகளை முன்வைக்குமாறு, அரசு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த சட்டமூல தயாரிப்புக்காக செயற்குழு, தொழிநுட்பக் குழு மற்றும் சட்டமூலக் குழு போன்றன தற்போது நியமிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மக்களுக்கு இது குறித்து யோசனை முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதோடு, ஜூலை 11ம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த யோசனையை நிதி அமைச்சிடம் எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் என, அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது. அத்துடன் இது குறித்த மேலதிகத் தகவல்களை 0112 484599 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தெரிந்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கராயனில் வர்த்தக நிலையம் எரிந்து நாசம்-

f93012e0-9753-44ac-a55e-8e48475f56b9-720x480கிளிநொச்சி அக்கராயன்குளம் அண்ணா சிலைச் சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டு வர்த்தக நிலையம் முற்றாக நாசமாகியது.. இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வர்த்தக நிலையம் தீப்பற்றிக்கொண்டதை அடுத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீ பற்றியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். இந்த தீ விபத்தினால், வர்த்தக நிலையத்தில் இருந்த 30 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும், பெருந்தொகைப் பணமும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் மரணம்-

UN secretaryஅமெரிக்காவில், தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை சந்தித்து வந்த ஐ.நா பொது சபையின் முன்னாள் தலைவரான ஜான் ஆஷ் உயிரிழந்துள்ளார். 61 வயதாகும் ஜான் ஆஷ், ஆண்டிகுவா மற்றும் பார்புடாவின் ஐநா தூதராக பணியாற்றியுள்ளார். ஜான் ஆஷ் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 2014 வரை, ஓராண்டுக்கு ஐநா பொது சபையின் தலைவராக ஜான் ஆஷ் செயற்பட்டார். சீன வர்த்தகர்களிடமிருந்து 1.3 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றதாகவும், சீன வர்த்தகர்களின் நலன்களை முன்னெடுக்க தனது பதவியை பயன்படுத்தியதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அக்டோபரில் ஒரு சிறப்பு நீதிமன்றத்தால், ஜான் ஆஷின் கண்டனத்துக்குள்ளானமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றம் முன்பாக இம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி-

gun shootingமஹர நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஹைபிரிட் காரில் வந்திருந்த ஒருவர், நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்த ஒருவர்மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தில் மரணமடைந்தவரின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஹெரியோரின் போதைப்பொருள் வழக்கு பற்றி சாட்சியமளிக்க வந்திருந்த 35வயதான ஒருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை இன்றுகாலை 10.45 மணியளவில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவத்துக்கு தனிப்பட்ட விரோதமே காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். களனி பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் நடத்தப்பட் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவர்கள் மீது கண்ணீர்புகை, நீர்த்தாரை பிரயோகம்-

sdfdfdஎதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மீது, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, குறித்த பேரணியால் பம்பலபிடியில் இருந்து கொள்ளுப்பிட்டிவரை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்துச் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்புப் பேரணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடத்தப்பட்ட வர்த்தகர் விடுதலை, கடையடைப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது-

sfdfவவுனியாவில் செவ்வாய்க்கிழமை மாலை கடத்தப்பட்ட வர்த்தகர் செல்வராஜா கடத்தல்காரர்களினால் புதன்கிழமை பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா மன்னார் வீதியில் உள்ள பூவரசங்குளம் பகுதியில் கடத்தல்காரர்கள் இவரைக் கொண்டு வந்து வாகனம் ஒன்றில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விடுதலையாகிய இவரிடம் கடத்தல் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் அதுபற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இவருடைய கடத்தலைக் கண்டித்தும், வர்த்தகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் வவுனியா வர்த்தகர் சங்கம் நாளையதினம் நடத்தவிருந்த கடையடைப்பு கைவிடப்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

புதிய கட்சி உருவாக்கும் எண்ணமில்லை-மஹிந்த ராஜபக்ச-

mahinda (4)புதிதாக கட்சி ஒன்றினை உருவாக்கும் திட்டம் தம்மிடம் இல்லையென முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும், பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஒன்றிணைந்த எதிர்கட்சி என்ற ஒரு கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் புதிதாக கட்சி உருவாக்கும் எண்ணமில்லை. என்ன நடக்க போகின்றது என்பதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையப்போவதாக தெரிவிக்கப்படும் கருத்தக்களில் எவ்வித உண்மையும் இல்லை. அரசாங்கத்துடன் ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒருபோதும் இணையமாட்டார்கள். இதேவேளை ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்படுவது, முற்றிலும் அரசியல் பழிவாங்கலாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார்.